மேலும் செய்திகள்
சோழவந்தானில் அனுஷ விழா
05-Aug-2025
வத்திராயிருப்பு, : ஒவ்வொரு ஆண்டும் சாதுர் மாஸ்ய விரத காலத்தில் வத்திராயிருப்பை சேர்ந்த பக்தர்கள் சார்பில் சிருங்கேரி பீடாதிபதிகளுக்கு பிக் ஷா வந்தனம் என்ற குருதட்சணை வழங்கப்படும். அதன்படி இந்த ஆண்டு கர்நாடகா மாநிலம் சிக்மகளூர் மாவட்டம் சிருங்கேரி மடத்தில் வைத்து வத்திராயிருப்பு பக்தர்கள் சிருங்கேரி பீடாதிபதி ஸ்ரீ பாரதி தீர்த்த சுவாமிகள், இளைய பீடாதிபதி விது சேகர சுவாமிகளிடம் குரு தட்சணையை வழங்கினர். முத்ராதிகாரி சங்கரநாராயணன், ஹரிஹர சுப்பிரமணியன், அருண் பாலாஜி, எஸ்.கிருஷ்ணன், சத்யநாராயணன், ஹரிஹரன், ஹரிஷ், ஆனந்த், ருத்ர கோடீஸ்வரன், ராமகிருஷ்ணன், சங்கரநாராயணன் உள்ளிட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர். சுவாமிகள் அனைவருக்கும் ஆசி வழங்கினர்.
05-Aug-2025