உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / சீனிவாச பெருமாள் கோயில் கும்பாபிஷேகம்

சீனிவாச பெருமாள் கோயில் கும்பாபிஷேகம்

ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துார் திருவண்ணாமலை சீனிவாச பெருமாள் கோயில் கும்பாபிஷேகம் 36 ஆண்டுகளுக்கு பிறகு நேற்று அதிகாலை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.தென் திருப்பதி என அழைக்கப்படும் இக்கோயிலில் 1989ல் கும்பாபிஷேகம் நடந்துள்ளது. 36 ஆண்டுகள் கடந்த நிலையில் தற்போது கோயில் புனரமைக்கப்பட்டு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.நேற்று அதிகாலை 4:45 மணிக்கு புண்ணியாக வாசனம், கால சாந்தி பூஜை, அக்னி ஆராதனம், மூர்த்தி ஹோமங்கள், விசேஷ பூர்ணாஹூதி நடந்தது. காலை 5:15 மணிக்கு மேல் கடம் புறப்பாடு ஆலய ப்ரதக்ஷணம் நடந்தது.அதிகாலை 5:50 மணிக்கு அறங்காவலர் குழு தலைவர் வெங்கட் ராமராஜா கொடியசைக்க, மூலஸ்தான விமானம், ராமர் பாத விமானம், சால கோபுரங்களுக்கு முத்துபட்டர் உட்பட பல்வேறு பட்டர்கள் வேத மந்திரங்கள் முழங்க, கலசங்களுக்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகத்தை நடத்தினர். அப்போது திரண்டிருந்த பக்தர்கள் கோவிந்தா, கோபாலா கோஷம் முழங்கி வழிபட்டனர்.விழாவில் அறங்காவலர்கள், எம்.எல்.ஏ. மான்ராஜ், செயல் அலுவலர் சக்கரை அம்மாள், பல்வேறு அரசுத்துறை அதிகாரிகள் உட்பட திரளான பக்தர்கள் பங்கேற்றனர். டி.எஸ்.பி ராஜா தலைமையில் 400க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை