உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / மாநில தடகளப்போட்டிக்கு ஸ்ரீவி.,மாணவர்கள் தேர்வு

மாநில தடகளப்போட்டிக்கு ஸ்ரீவி.,மாணவர்கள் தேர்வு

ஸ்ரீவில்லிபுத்துார்: தமிழ்நாடு பள்ளி கல்வித்துறை சார்பில் மாவட்ட அளவிலான தடகளப்போட்டி விருதுநகர் கே.வி.எஸ். மேல்நிலைப்பள்ளியில் நடந்தது. இதில் ஸ்ரீவில்லிபுத்துார் வள்ளுவர் வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் பங்கேற்றத்தில் 14 வயதுக்குட்பட்ட மாணவர் பிரிவில் குண்டு எறிதலில், 9ம் வகுப்பு மிதுன் ராஜ், 19 வயதுக்குட்பட்ட மாணவர் பிரிவில் 12ம் வகுப்பு அகிலேஷ் மித்ரன் முதலிடம் பெற்று மாநில அளவிலான தடகளப் போட்டிக்கு தேர்வு பெற்றனர். சாதனை மாணவர்களை பள்ளி காளாளர் சிவகுமரன், முதல்வர் டேவிட் மனோகரன், நிர்வாக அலுவலர் சந்தானம், உடற்கல்வி ஆசிரியர் ஜெயக்குமார், ஆசிரியர்கள் பாராட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ