உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / மாவட்டத்தில் ‛நலம் காக்கும் ஸ்டாலின் திட்டம் துவக்கம்

மாவட்டத்தில் ‛நலம் காக்கும் ஸ்டாலின் திட்டம் துவக்கம்

விருதுநகர் : விருதுநகர் மாவட்டத்தில் நலம் காக்கும் ஸ்டாலின்' திட்டத்தின் துவக்க விழா விருதுநகர் சத்திரரெட்டியபட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் அமைச்சர்கள் சாத்துார் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு தலைமையில் நடந்தது. இதில் 2 மாற்றுத்திறனாளிகளுக்கு சக்கர நாற்காலிகள், தேசிய அடையாள அட்டையும் அமைச்சர்களால் வழங்கப்பட்டது. இந்த முகாமில் 24 வகையான பரிசோதனைகள் எடுக்கப்படுகிறது. மேலும் பொது, மகளிர், நரம்பியல், கண், உள்ளிட்ட சிறப்பு மருத்துவ சிகிச்சைகள் இலவசமாக வழங்கப்படவுள்ளது. முகாமில் முதல்வரின் விரிவான மருத்துவக்காப்பீட்டு திட்டத்தில் பதிவு செய்தல், மாற்று திறனாளி அரசு அடையாள அட்டை, அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு நலவாரியம் உறுப்பினர் அட்டை, வருமானச்சான்றிதழ் வழங்கவும் ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது. இந்நிகழ்ச்சியில் கலெக்டர் சுகபுத்ரா, எம்.எல்.ஏ.,க்கள் சீனிவாசன், அசோகன், சிவகாசி மாநகராட்சி மேயர் சங்கீதா, டி.ஆர்.ஓ., ராஜேந்திரன், அரசு மருத்துவக்கல்லுாரி முதல்வர் ஜெயசிங், சுகாதாரப் பணிகள் இணை இயக்குனர் காளிராஜன், விருதுநகர் மாவட்ட சுகாதார அலுவலர் யசோதாமணி, விருதுநகர் நகராட்சி தலைவர் மாதவன் உள்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை