உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / விருதுநகரில் மாநில நீச்சல் போட்டி

விருதுநகரில் மாநில நீச்சல் போட்டி

விருதுநகர் : விருதுநகர் செந்திக்குமார நாடார் கல்லுாரியில் மாநில அளவிலான நீச்சல் போட்டி கல்லுாரி தலைவர் சம்பத்குமார் தலைமையில் நடந்தது. இதில் சென்னை, திருவள்ளுர், திருச்சி, காரைக்குடி, தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருப்பூர், கோவை, சேலம், மதுரை, தேனி, விருதுநகர், துாத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து பள்ளி, கல்லுாரிகளைச் சேர்ந்த 349 மாணவர்கள் பங்கேற்றனர்.5 வயது முதல் 20 வயது வரை 9 பிரிவுகள் வயது வாரியாக பிரிக்கப்பட்டு 100 வகையான போட்டிகள் இருபாலருக்கும் நடந்தது. ஒட்டு மொத்த புள்ளிகள் அடிப்படையில் மதுரை அக்வாடிக் அசோசியேஷன் முதல் இடமும், பிளாஸ் ஆக்டிவிட்டி சென்டர் இரண்டாமிடம் வென்றனர். இதில் செயலாளர் மகேஷ் பாபு, கல்லுாரி முதல்வர் சாரதி, உப தலைவர்கள் ராமசாமி, டெய்சிராணி, பொருளாளர் குமரன், சுயநிதி பாடப்பிரிவு ஒருங்கிணைப்பாளர் காளிதாஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர். உடற்கல்வித் துறை இயக்குனர் முருகேசன் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ