மேலும் செய்திகள்
டாக்டர்கள் பணியிடங்கள் நிரப்ப நடவடிக்கை தேவை
28-Jan-2025
அருப்புக்கோட்டை; அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனை சித்தா பிரிவில் மூட்டு வலி, வாத நோய்களுக்கு புதியதாக நீராவி குளியல் சிகிச்சை செய்யப்பட்டு வருகிறது.அருப்புக்கோட்டையில் மாவட்ட தலைமை அரசு மருத்துவமனை தனியார் மருத்துவமனைகளுக்கு நிகராக சிகிச்சை அளிக்கப்படுகிறது. தினமும் ஆயிரக்கணக்கான நோயாளிகள் உள்ளூர் வெளியூர் அருகில் உள்ள மாவட்டங்களை சேர்ந்தவர்கள் சிகிச்சை பெறுகின்றனர்.இங்குள்ள சித்தா பிரிவின் சித்த மருத்துவ முறையில் மூலிகை மருந்துகள் தரப்படுகின்றன. புதியதாக நீராவி குளியல் கருவி பொருத்தப்பட்டுள்ளது. மூட்டு வலி, வாத நோய்கள் ஆகியவற்றிற்கு மூலிகைகளை பயன்படுத்தி இந்த கருவி மூலம் நீராவி குளியல் சிகிச்சை செய்தால் நல்ல பலன் கிடைப்பதாக நோயாளிகள் இங்கு விரும்பி வருகின்றனர். ஒரு நாளைக்கு 50 பேர்கள் வரை நீராவி குளியல் சிகிச்சை பெறலாம்.இதுகுறித்து சித்தா பிரிவு டாக்டர் தர்மராஜன்: நீராவி குளியல் சிகிச்சை கை, கால், மூட்டு வலி, வாத நோய்கள், உடம்பு வலி ஆகியவற்றிற்கு ஏற்றது. யூகலிப்டஸ், நொச்சி, வாத நாராயணன் உள்ளிட்ட மூலிகை இலைகளை கொண்டு நோயாளிகளுக்கு ஆவி பிடிக்க வைப்பதால் நல்ல பலன் தருகிறது. என்றார்.
28-Jan-2025