உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / தீராத தெருநாய்கள் தொல்லை

தீராத தெருநாய்கள் தொல்லை

சாத்துார் : இருக்கன்குடியில் தெரு நாய்கள் தொல்லையால் மக்கள் அவதிப்படுகின்றனர்.இருக்கன்குடி கீழத்தெருவை சேர்ந்தவர் தங்க மாரியப்பன் இவரது மகன் மாரிக்கண்ணு 9, மகள் நாகஜோதி 10, என இரு குழந்தைகளையும் சென்ற மாதம் தெரு நாய்கள் கடித்து காயப்படுத்தின.இதற்காக இரு குழந்தைகளும் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று மீண்டும் நாகஜோதியை தெரு நாய் கடித்தது. சாத்துார் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று சென்றார். இது குறித்து தங்க மாரியப்பன் கூறியதாவது: இருக்கன்குடியில் ஆயிரக்கணக்கான நாய்கள் உலா வருகின்றன. மற்ற ஊர்களில் பிடித்துக் கொண்டு வந்து நாய்களை இருக்கன்குடியில் இரவு நேரத்தில் இறக்கி விட்டு விட்டு செல்கின்றனர்.வீதியில் நாய்கள் ஒன்றோடு ஒன்று கடித்து மோதுவது அச்சுறுத்தலாக உள்ளது. ஊராட்சித் தலைவரிடம் முறையிட்டும் நடவடிக்கை எடுக்கவில்லை. இருக்கன்குடிக்கு வரும் பக்தர்களும் நாய் கடியால் பாதிக்கப்படுகின்றனர்.தெரு நாய்களை கட்டுப்படுத்த அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். வெறியுடன் உலாவரும் தெரு நாய்களால் குழந்தைகளை வைத்துள்ள பெற்றோர்கள் அச்சத்துடன் வாழும் நிலை உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ