மேலும் செய்திகள்
ஆரணி ஆற்றின் கரைகள் பலப்படுத்தம் பணி தீவிரம்
03-Aug-2025
சாத்துார்: சாத்துார் வெங்கடாசலபுரம் உப்போடை நதியை துார்வாரி, கரைகளை பலப்படுத்த விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனர். மேட்டமலை, முத்தால் நாயக்கன்பட்டி, சிந்தப் பள்ளி, வெற்றிலையூரணி கண்மாய்கள் நிரம்பி வெளியேறும் மழை நீர் வெங்கடாஜலபுரத்தில் உப்போடை நதியாக மாறி ஓடுகிறது. மழைக்காலங்களில் உப்போடை நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வெங்கடாசலபுரம் செக் டேம் நிரம்புவதுடன் செக்டேமின் வலது, இடது கால்வாய் மூலம் ராமலிங்கபுரம் கண்மாய், அம்மா பட்டி கண்மாய், வேண்டாங்குளம் கண்மாய்கள் நிரம்புகின்றன. இந்த கண்மாய்கள் மூலம் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலத்தில் நெல், கம்பு, சிகப்பு சோளம், எள், மக்காச்சோளம், தோட்டப்பயிர்களான வாழை, தென்னை,கொய்யா, சப்போட்டா ,தக்காளி ,கீரை, வெள்ளரிக்காய் போன்ற பயிர்கள் விளைவிக்கப்பட்டு வருகின்றன. கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு உப்போடை நதி துார்வாரப்பட்டு கரைகள் பலப்படுத்தப்பட்டது.இதன் பின்னர் எந்த ஒரு பணியும் நடைபெறவில்லை. தற்போது உப்போடை நதியில் அதிகளவு முள் செடி முளைத்து காணப்படுகிறது. இதனால் இந்த பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் அதல பாதாளத்திற்கு சென்று விட்டது. சிந்தப் பள்ளி வெங்கடாசலபுரம் பகுதி அட்டைக்கம்பெனிகள், வீடுகளில் இருந்து வெளி வரும் கழிவு நீரும் ஆற்றில் கலந்து வருகிறது. இதனால் ராமலிங்கபுரம், அம்மாபட்டி, வேண்டாங் குளம் கண்மாயின் தண்ணீர் தரம் பாதிக்கப்படுவதோடு இதன் மூலம் பயிர் செய்யப்படும் பயிர்களின் விளைச்சலும் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. எனவே உப்போடை நதியை துார் வாருவதோடு கரைகளை பலப்படுத்தி கழிவு நீர் ஆற்றில் கலப்பதை தடுக்கவும் பொதுப்பணித்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.
03-Aug-2025