உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / மாணவர் சேர்க்கை கலந்தாய்வு துவக்கம்

மாணவர் சேர்க்கை கலந்தாய்வு துவக்கம்

ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துார் அரசு கலைக் கல்லுாரியில் நேற்று முதல் மாணவர் சேர்க்கை கலந்தாய்வு துவங்கியது.இக்கல்லுாரியில் இளங்கலை பாடத்தில் தமிழ், ஆங்கிலம், வணிகவியல், கணித அறிவியல், கணிதம் ஆகிய 5 பிரிவுகளுக்கு 280 இடங்கள் மட்டுமே உள்ள நிலையில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர்.இதில் நேற்று மாற்றுத்திறனாளிகள், முன்னாள் ராணுவத்தினர், விளையாட்டு வீரர்கள், தேசிய மாணவர் படை ஆகியோருக்கான சிறப்பு ஒதுக்கீடு இடங்களுக்கு கலந்தாய்வு நடத்தப்பட்டு மாணவர்கள் சேர்க்கப்பட்டனர். நாளை (ஜூன் 4ல்) கணிதம், கணினி அறிவியல், ஜூன் 5ல் வணிகவியல், 6ல் தமிழ், ஆங்கிலம் ஆகிய பாடப்பிரிவுகளுக்கு கலந்தாய்வு நடத்தப்பட்டு மாணவர்கள் சேர்க்கபடவுள்ளனர்.இது குறித்து முதல்வர் சரவணன் கூறுகையில், கலந்தாய்வுக்கு வரும் மாணவர்கள் விண்ணப்ப படிவம் அசல் மற்றும் 3 நகல்கள், மார்க் சீட்டுகள், மாற்று சான்று, சாதி சான்று, அலைபேசி எண் இணைக்கப்பட்ட ஆதார் கார்டு, வருவாய் சான்றிதழ், வங்கி பாஸ்புக் மூன்று பாஸ்போர்ட் சைஸ் போட்டோக்களுடன் வரவேண்டும், என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை