உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / ஜூலை 11ல் மாணவர்கள் குறைதீர் கூட்டம்

ஜூலை 11ல் மாணவர்கள் குறைதீர் கூட்டம்

விருதுநகர்: கலெக்டர் சுகபுத்ரா செய்திக்குறிப்பு:அரசு, உதவி பெறும் பள்ளிகளில் பிளஸ் 2 வகுப்பு தேர்வு எழுதி தேர்ச்சி பெற்ற மாணவர்களைக் கல்லுாரி, தொழிற்பயிற்சி கல்வியில் சேர்வது தொடர்பான 4ம் கட்ட சிறப்பு குறைதீர் கூட்டம் ஜூலை11 காலை 10:00 மணிக்கு நடக்கிறது. இதில் பிளஸ் 2 வகுப்புத் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்ற மாணவர்கள், கல்லுாரியில் சேர இயலாத மாணவர்கள் பங்கு பெறலாம். 2025--26 கல்வியாண்டு மட்டுமல்லாது அதற்கு முந்தைய கல்வியாண்டுகளிலும் பயின்று கல்லூரியில் சேராத மாணவர்களும் இக்குறைத்தீர் கூட்டத்தில் கலந்து கொள்ளலாம், என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !