உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / மாணவர்கள் தொல்லியல் பயணம்

மாணவர்கள் தொல்லியல் பயணம்

அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை சாலியர் மகாஜன மேல்நிலைப்பள்ளியின் தொல்லியல் மன்றத்தின் சார்பாக 20 மாணவர்கள் தொல்லியல் பயணம் செய்தனர். மதுரை அருகே வரிச்சியூர், குன்னத்தூர் குடைவரை கோயில் ,சமணர் படுக்கை, திருவாதவூர் சிவன் கோயில், திருமோகூர் கால பெருமாள் கோயில், யானைமலை, நரசிங்க பெருமாள் கோயில், லாடன் கோயில் சமணர் படுக்கை மற்றும் தென்பரங்குன்றம் குடைவரை கோயில் உள்ளிட்ட வரலாற்று சிறப்புமிக்க இடங்களை மாணவர்கள் பார்வையிட்டனர். கோயில் கட்டுமான பணிகள் உள்ளிட்ட தகவல்களை தொல்லியல் ஆய்வாளர் ஸ்ரீதர் விளக்கினார். கோயிலின் கட்டடக்கலை, சிற்பக்கலை, கல்வெட்டு குறித்து மாணவர்களுக்கு விளக்கப்பட்டது. உடன் ஆசிரியர்கள் ஆறுமுக பெருமாள், ஜீவமணி, சுப்புலட்சுமி, தொல்லியல் ஆய்வாளர் ஸ்ரீதர் உடன் சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை