உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / நரிக்குடி சுள்ளங்குடி நடுநிலைப்பள்ளியில் பெயர்ந்து விழும் கூரையால் மாணவர்கள் அச்சம்

நரிக்குடி சுள்ளங்குடி நடுநிலைப்பள்ளியில் பெயர்ந்து விழும் கூரையால் மாணவர்கள் அச்சம்

நரிக்குடி : நரிக்குடி சுள்ளங்குடி நடுநிலைப் பள்ளியில் கூரையின் சிமின்ட் பூச்சு பெயர்ந்து விழுவதால் மாணவர்கள் அச்சத்தில் உள்ளனர். நரிக்குடி சுள்ளங்குடியில் உள்ள நடுநிலைப்பள்ளியில் நூற்றுக்கு மேற்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர். 6, 7, 8ம் வகுப்பு மாணவர்களுக்கு 15 ஆண்டுகளுக்கு முன் ரூ. பல லட்சங்கள் செலவில் வகுப்பறை கட்டடம் கட்டப்பட்டது. தரம் இல்லாமல் கட்டப்பட்டதால் கட்டடத்தின் உறுதித் தன்மை கேள்விக்குறியாகி உள்ளது. கம்பிகள் துருப்பிடித்து வெளியில் தெரிகிறது. சிமென்ட் கலவை சரிவர இல்லாததால் கூரை சேதமடைந்து சிமென்ட் பூச்சு பெயர்ந்து விழுந்தது. நல்ல வேளையாக மாணவர்கள், ஆசிரியர்கள் இல்லாததால் யாருக்கும் சேதம் ஏற்படவில்லை. அவ்வப்போது கூரை உடைந்து விழுவதால் பயத்தில் மாணவர்கள் மரத்தடியில் படிக்கின்றனர். அங்கும் காற்று பலமாக வீசுவதால் மரக்கிளைகள் முறிந்து விபத்து ஏற்படுமோ என்கிற அச்சம் இருந்து வருகிறது. மழை நேரத்தில் சேதம் அடைந்த கட்டடத்தில் ஒதுங்க வேண்டியுள்ளது. விபத்து அச்சம் இருப்பதால் ஆசிரியர்கள், மாணவர்கள் பெரிதும் சிரமத்திற்கு ஆளாகி வருவதுடன், பள்ளிக்கு செல்ல பயப்படுகின்றனர். அக்கட்டடத்தை அப்புறப்படுத்தி புதிய தரமான கட்டடம் கட்ட வேண்டும் என பெற்றோர் எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை