காலாண்டு விடுமுறைக்கு புத்தகங்களை தேட... படிக்கும் ஆர்வத்தை பெருக்க... விருதுநகர் புத்தகத்திருவிழாவில் குவியும் மாணவர்கள்
விருதுநகர்: காலாண்டு விடுமுறை துவங்கியுள்ள நிலையில் விருதுநகர் கே.வி.எஸ்., பள்ளி மைதானத்தில் நடந்து வரும் புத்தகத் திருவிழாவில் புத்தகங்களை தேடி, படிக்கும் ஆர்வத்தை பெருக்க மாணவர்கள் மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.எனது நுாலகமே எனக்கு போதிய பெரும் செல்வம், என்கிறார் ஆங்கில கவிஞர் ேஷக்ஸ்பியர். நான் படிக்காத ஒரு புத்தகத்தை கொடுக்கும் நபர், எனக்கு சிறந்த நண்பர்,” என ஆபிரகாம் லிங்கன் கூறுகிறார். உள்ளத்தையும், மனதையும் மாற்றி, அறிவை கூராக்கும் சிந்தனைகள் புத்தகங்களில் ஏராளம் உள்ளன. சமூகத்தை அடுத்த கட்ட முன்னேற்றத்திற்கு அழைத்து செல்லும் அச்சாணிகளாக புத்தகங்கள் உள்ளன.இத்தகைய முக்கியத்துவம் நிறைந்த புத்தகங்களை புதியதாக வருவோருக்கு அறிமுகப்படுத்தவும், அறிமுகமானவர்கள் இன்னும் நெருக்கமாகி உறவாடவும் விருதுநகர் மதுரை ரோடு கே.வி.எஸ்., பள்ளி மைதானத்தில் புத்தகங்கள் குவித்து வைக்கப்பட்டுள்ளன. 2ம் நாளான நேற்று காலாண்டு விடுமுறை என்பதால் பள்ளி மாணவர்கள் குவிந்தனர். ஏற்கனவே மாவட்ட நிர்வாகம் சார்பில் அவர்களிடம் புத்தக உண்டியல் கொடுக்கப்பட்டுள்ளதால் இம்முறை புத்தகங்களை வாங்குவதில் மாணவர்களின் பங்களிப்பும் அதிகம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தினமலர் ஸ்டால்
தினமலர் நாளிதழின் தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட் ஸ்டாலில் புகழ்பெற்ற எழுத்தாளர்கள் எழுதிய புத்தகங்கள் கிடைக்கின்றன. ஆன்மிகம், அறிவியல், தத்துவம், புனைவு கதைகள் தொடர்பாக புத்தகங்கள் உள்ளன. செப். 27 முதல் அக். 7 வரை தினமும் காலை 10:00 மணி முதல் இரவு 9:00 மணி வரை புத்தகத் திருவிழா நடக்கிறது.அனுமதி இலவசம். சிறுவர்களுக்கான முப்பரிமாண அரங்கம், விளையாட்டு அரங்கங்கள் உள்ளன. வனத்துறை கண்காட்சி நடக்கிறது. மாலை 4:00 மணிக்கு கலை நிகழ்ச்சிகளும், 6:00 மணிக்கு மேல் சிறப்பு பேச்சாளர்களும் பேசுகின்றனர். பபாசி, மாவட்ட நிர்வாகம், பொது நுாலகத்துறை இணைந்து ஏற்பாடுகளை செய்கிறது.புத்தகத்திருவிழாவில் தேடி வாங்கிய புத்தகங்கள் குறித்து வாசகர்கள் கூறியதாவது: புனைவு கதைகள் படிக்க விருப்பம்
எம்.ஆர்.யமுனா, அருப்புக்கோட்டை: வழக்கமாக கட்டுரை புத்தகங்கள் தான் படிப்பேன். இந்த முறை புத்தகத்திருவிழாவில் நாவல், புனைவு கதைகளை தேர்ந்தெடுக்க ஆர்வமாக உள்ளேன். கேரள எழுத்தாளர் பென்யாமின் எழுதிய ஆடுஜீவிதம் புத்தகத்தை வாங்கியுள்ளேன். கவிதை புத்தகங்களையும் தேடிக் கொண்டிருக்கிறேன். தமிழில் மட்டும் தான் இலக்கிய செழுமை உள்ள நிறைய புத்தகங்களை பார்க்க முடியும். இன்னும் நிறைய படிக்க விரும்புகிறேன். ஆளுமைகளாக மாற்றும்
க.பால்பாண்டி, காரியாபட்டி: குழந்தைகளுக்கு தேவையான எழுத்து புத்தகங்களை வாங்க வந்தேன். அப்படியே எனக்கும் தேவையான பணம்சார் உளவியல் புத்தகத்தை வாங்கி உள்ளேன். வாசிப்பும், படிக்கும் ஆர்வமும் தான் மனிதனை வளமிக்க ஒருவராக மாற்றும். அவர்களை நல்ல ஆளுமைகளாக மாற்றி சமூகத்திற்கு பயன்பட வைக்கும். அன்று படித்து சான்றோர் ஆனவர்களை தான் இன்றும் நாம் பின்பற்றி முன்னே செல்கிறோம். சஸ்பென்ஸ் புத்தகங்கள் படிக்கும்
அம்பரீஷ், சாத்துார்: சஸ்பென்ஸ் த்ரில்லர் புத்தகங்கள் என்றால் மிகவும் பிடிக்கும். எழுத்தாளர் சுஜாதாவின் கிரைம் திரில்லர்கள் என்றால் தனி விருப்பம். இது போன்ற புத்தகங்களை வாசிப்பதன் மூலம் ஒரு திரைப்படத்தை மனதில் ஓட்டி பார்த்தது போன்ற கற்பனை வளம் பெருகுகிறது. இது ஒரு விதத்தில் மனநிறைவையே தருகிறது. இன்னும் நிறைய புத்தகங்களை வாசிக்க விரும்புகிறேன். தேர்வுக்கு உதவுகின்றன
டி.ஹரிஹரன், விருதுநகர்: நான் குரூப் 1 முதன்மை தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளேன். அடுத்தகட்ட படிப்புக்கு தேவையான புத்தகங்களை வாங்க வந்துள்ளேன். இவை தவிர காவல்கோட்டம், குற்றப்பரம்பரை, கருவாச்சி காவியம் போன்ற புத்தகங்களையும் வாங்க வந்துள்ளேன். போட்டி தேர்வுக்கு தயாராகும் அதே நேரம் மனதுக்கு இதமாக கற்பனை புனைவு புத்தகங்களையும் படிப்பது தேர்வு எழுதும் போது உதவி செய்யும் என நம்புகிறேன்.
புத்தகத்திருவிழாவில் தேடி வாங்கிய புத்தகங்கள் குறித்து வாசகர்கள் கூறியதாவது:
புனைவு கதைகள் படிக்க விருப்பம்எம்.ஆர்.யமுனா, அருப்புக்கோட்டை.வழக்கமாக கட்டுரை புத்தகங்கள் தான் படிப்பேன். இந்த முறை புத்தகத்திருவிழாவில் நாவல், புனைவு கதைகளை தேர்ந்தெடுக்க ஆர்வமாக உள்ளேன். கேரள எழுத்தாளர் பென்யாமின் எழுதிய ஆடுஜீவிதம் புத்தகத்தை வாங்கியுள்ளேன். கவிதை புத்தகங்களையும் தேடிக் கொண்டிருக்கிறேன். தமிழில் மட்டும் தான் இலக்கிய செழுமை உள்ள நிறைய புத்தகங்களை பார்க்க முடியும். இன்னும் நிறைய படிக்க விரும்புகிறேன்.ஆளுமைகளாக மாற்றும்க.பால்பாண்டி, காரியாபட்டி.குழந்தைகளுக்கு தேவையான எழுத்து புத்தகங்களை வாங்க வந்தேன். அப்படியே எனக்கும் தேவையான பணம்சார் உளவியல் புத்தகத்தை வாங்கி உள்ளேன். வாசிப்பும், படிக்கும் ஆர்வமும் தான் மனிதனை வளமிக்க ஒருவராக மாற்றும். அவர்களை நல்ல ஆளுமைகளாக மாற்றி சமூகத்திற்கு பயன்பட வைக்கும். அன்று படித்து சான்றோர் ஆனவர்களை தான் இன்றும் நாம் பின்பற்றி முன்னே செல்கிறோம்.சஸ்பென்ஸ் புத்தகங்கள் படிக்கும்அம்பரீஷ், சாத்துார்.சஸ்பென்ஸ் த்ரில்லர் புத்தகங்கள் என்றால் மிகவும் பிடிக்கும். எழுத்தாளர் சுஜாதாவின் கிரைம் திரில்லர்கள் என்றால் தனி விருப்பம். இது போன்ற புத்தகங்களை வாசிப்பதன் மூலம் ஒரு திரைப்படத்தை மனதில் ஓட்டி பார்த்தது போன்ற கற்பனை வளம் பெருகுகிறது. இது ஒரு விதத்தில் மனநிறைவையே தருகிறது. இன்னும் நிறைய புத்தகங்களை வாசிக்க விரும்புகிறேன்.தேர்வுக்கு உதவுகின்றனடி.ஹரிஹரன், , விருதுநகர்.நான் குரூப் 1 முதன்மை தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளேன். அடுத்தகட்ட படிப்புக்கு தேவையான புத்தகங்களை வாங்க வந்துள்ளேன். இவை தவிர காவல்கோட்டம், குற்றப்பரம்பரை, கருவாச்சி காவியம் போன்ற புத்தகங்களையும் வாங்க வந்துள்ளேன். போட்டி தேர்வுக்கு தயாராகும் அதே நேரம் மனதுக்கு இதமாக கற்பனை புனைவு புத்தகங்களையும் படிப்பது தேர்வு எழுதும் போது உதவி செய்யும் என நம்புகிறேன்.
கவனம் ஈர்த்த புத்தகங்கள் சில
எமோஷனல் இன்டெலிஜென்ஸ் 2.0ஐம்பதாயிரம் பிரதிகள் விற்ற “இட்லியாக இருங்கள் - எமோஷனல் இன்டெலிஜென்ஸ்” புத்தகத்தின் 2ம் பாகம். இப்போது உலகை ஆண்டுகொண்டிருப்பது இ.க்யூ., எனப்படும் எமோஷனல் இன்டெலிஜென்ஸ் மட்டுமே. உள்ளுணர்வுகளைத் துல்லியமாகப் புரிந்துகொண்டு அவற்றைச் சரியான முறையில் கையாளும் கலையை யார் திறன்படக் கற்கிறார்களோ அவர்களே இன்று வெற்றியாளர்களாக வலம் வருகின்றனர். தனிப்பட்ட வாழ்வில் மட்டுமல்ல படிப்பு, அலுவலகம், தொழில் என்று வாழ்வின் எந்த நிலையில் இருந்தாலும் இ.க்யூ., முக்கியமானதாக உள்ளது. இதை பற்றி பேசுகிறது இப்புத்தகம்.ஆசிரியர் சோம. வள்ளியப்பனின்வெளியீடு: கிழக்கு பதிப்பகம்விலை: 250நோய் தீர்க்கும் டயட் பிளான்உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோர் என்று மணிமேகலை காலத்திலேயே கூறப்பட்டுள்ளது. அவ்வாறு கொடுக்கும் உணவு, சத்துள்ளதாக, தரமானதாக இருக்க வேண்டும். இப்புத்தகத்தின் நோக்கம் இது தான். யார் யார் என்னென்ன உணவு உண்டால், உடல் ஆரோக்கியமாக இருக்கும் என்பதை இந்த நூல் ஆய்வு செய்திருக்கிறது. பிறந்த குழந்தைக்கு சீம்பால் கொடுப்பதில் துவங்கி, நூறு வயது முதியவர் வரைக்கும் என்ன உணவு உண்ணலாம் என்பதை ஆய்வு செய்து, ஹைதராபாத்திலுள்ள தேசிய உணவு ஊட்ட நிறுவனத்தின் பரிந்துரைகளை இணைத்து தந்துள்ளார் ஆசிரியர்.ஆசிரியர்: கு.கணேசன்.வெளியீடு: தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிட்.,விலை: ரூ.300ஆட்சித்தலைவிகள்இப்புத்தகத்தில் தமிழகம், கேரளாவில் பணிபுரிந்த, பணிபுரிந்து கொண்டிருக்கும் 15 பெண் கலெக்டர்கள், ஐ.ஏ.எஸ்., ஆன கதையை விவரித்துள்ளார் ஆசிரியர். அவர்களின் கல்லுாரி காலம், தேர்வுக்கு தயாரான விதம், தன்னம்பிக்கை, ஆளுமை என அனைத்தும் விரிவாக விவரிக்கப்பட்டுள்ளது. ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., ஆக துடிக்கும் மாணவர்களின் லட்சியத்தை நிறைவேற்றும் வல்லமை கொண்டது இப்புத்தகம்ஆசிரியர்: ஜி.வி.ரமேஷ்குமார்வெளியீடு: தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிட்.,விலை ரூ:160ஒற்றை வைக்கோல் புரட்சிஇயற்கையானது வேளாண்மையைக் கவனித்துக் கொள்ளும், நாம் சற்றுத் தள்ளி உட்கார்ந்து வேடிக்கை பார்க்கலாம் என்று பொருள் கொண்டால், ஆசிரியர் புகோகா நாம் அறிந்து கொள்ள வேண்டியது நிறைய உள்ளது என கற்றுக் கொடுப்பார். சரியாகக் கூற வேண்டுமானால், வேட்டையாடி சேகரித்த காலம் ஒன்றுதான் இயற்கை வேளாண்மைக் காலம். பயிர்களை வளர்க்கத் துவங்கியது கலாச்சாரக் கண்டுபிடிப்பாகும். முக்கியமான வேறுபாடு என்னவென்றால், அது இயற்கையோடு ஒத்துழைப்பதில் இருக்கிறது.ஆசிரியர்: மசானபு புகோகாவெளயீடு: எதிர் வெளியீடுவிலை: ரூ.200நலமறிதல்நோய் என்பதும் உடலின் ஓர் இயல்பான நிலை என்பதனால் பொறுமையுடன் நோயை அனுபவித்து அதைக் குணப்படுத்திக்கொள்ள உடலுக்கு அவகாசம் அளிப்பதே சிறந்தது என்பது இயற்கை உணவுக் கோட்பாடு. உணவே பெரும்பாலும் மனநிலைகளை உருவாக்குகிறது என்பது இயற்கை உணவுக் கோட்பாட்டின் கொள்கை. நல்ல உணவு அமைதியை அளிக்கும். நல்ல சிந்தனைகளை அளிக்கும். மிதமிஞ்சிய புலன் நாட்டத்தை அளிக்காது. ஆகவே பதற்றமும் வேகமும் உற்சாகமும் சோர்வும் மாறிமாறி வரும் நிலை இருக்காது. இதை தான் பேசுகிறது நலமறிதல் புத்தகம்.ஆசிரியர்: ஜெயமோகன்வெளியீடு: தன்னறம்விலை: ரூ.200புத்தகத்திருவிழா அரங்கு 88ல் தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட் அரங்கு இடம் பெற்றுள்ளது. இங்கு தினமலர் ஆண்டு சந்தா ரூ.1999 ரொக்கம் அல்லது ஆன்லைன் அல்லது காசோலை மூல் செலுத்தினால் ரூ.1000 மதிப்புள்ள புத்தகங்களை தேர்வு செய்து இலவசமாக பெற்று கொள்ளலாம். அங்கு இடம் பெற்றுள்ள புத்தகங்களுக்கு 10 சதவீத தள்ளுபடி உண்டு.