உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / சாத்துார் அரசு ஐ.டி.ஐ.,க்கு செல்லும் மாணவர்கள் ரோடு வசதியின்றி அவதி

சாத்துார் அரசு ஐ.டி.ஐ.,க்கு செல்லும் மாணவர்கள் ரோடு வசதியின்றி அவதி

சாத்துார்: சாத்துார் அரசு ஐ.டி.ஐ.,செல்லும் மாணவர்கள் ரோடு, தெருவிளக்கு வசதி இன்றி அவதிப்படுகின்றனர். சாத்துார் அருகே இ.முத்துலிங்காபுரத்தில் அரசு ஐ.டி.ஐ., 5 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது.சாத்துார் விருதுநகர் ரோட்டில் சிவகாசி விலக்கு அருகே உள்ள கல்லுாரிக்கு செல்லும் ரோடு மண் சாலையாக உள்ளது. மேலும் இங்கு தெருவிளக்கு வசதி இல்லை.கல்லுாரிக்கு செல்லும் பாதையில் மெட்டல் ரோடு அமைக்கப்பட்டு ஓராண்டுக்கு மேல் ஆகிறது இன்று வரை தார் ரோடு போடப்படவில்லை.கல்லுாரி விடுதியில் தங்கி படிக்கும் மாணவர்கள் இரவு நேரத்தில் சாத்துார் வந்து விட்டு விடுதிக்கு செல்லும்போது இருட்டில் நடந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது.கல்லுாரிக்கு இருசக்கர வாகனத்தில் வரும் மாணவர்கள் கரடு முரடாக உள்ள ரோட்டில் வாகனத்தை ஓட்ட முடியாமல் நிலை தடுமாறி கீழே விழுந்து காயமடைகின்றனர்.மாணவர்கள் சிரமத்தை போக்கும் வகையில் அரசு ஐ.டி.ஐ கல்லுாரிக்கு செல்லும் ரோட்டில் தார் ரோடு அமைக்கவும் இரவு நேரத்தில் மக்கள் மாணவர்கள் அச்சமின்றி நடமாட தெரு விளக்கு அமைக்கவும் அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி