இடைநின்ற மாணவர்கள்: கலெக்டர் ஆய்வு
விருதுநகர்: விருதுநகர் நகர், ஒன்றிய பகுதிகளில் 8ம் வகுப்பில் இடைநின்ற மாணவர்களை மீண்டும் பள்ளியில் சேர்க்க, கலெக்டர் ஜெயசீலன் தலைமையில் கள ஆய்வு நடந்தது.இந்த ஆய்வின் போது, 5 மாணவர்கள், பெற்றோர்களிடம் பள்ளிக்கு செல்லாத காரணங்களை கேட்டறிந்தார். மாணவர்கள், பெற்றோர்கள் கூறும் காரணங்களின் அடிப்படையில், அவர்களுக்கு உரிய வழிகாட்டுதல், அறிவுரைகள் வழங்கப்பட்டு, பள்ளியில் சேர்வதை உறுதி செய்யும் வகையில் தொடர்ந்து அலுவலர்கள் மூலம் கண்காணிக்கப்பட்டு, அவர்களுக்கு தேவையான மருத்துவ உதவி, நிதியுதவி, மாணவர்களுக்கும், பெற்றோருக்கும் தேவையான ஆலோசனைகள் வழங்குதல், சிறப்பு வகுப்புகள் எடுத்தல், ஆர்வமின்மையை போக்கி மீண்டும் பள்ளியில் சேர்த்தல், புலம்பெயர்ந்தவர்களை கண்டறிந்து உரிய வழிகாட்டுதல், கல்வியின் அவசியம் குறித்து எடுத்துரைத்தல் உள்ளிட்ட பல்வேறு உதவிகள் வழங்கப்பட்டு இடைநிற்றல் மாணவர்களை பள்ளியில் சேர்ப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் ஜெயசீலன் தெரிவித்தார்