மேலும் செய்திகள்
மகளிர் உரிமைத்தொகை கேட்டு குவியும் மனுக்கள்
17-Jul-2025
விருதுநகர்: விருதுநகரில் அனைத்துத் துறை திட்டப்பணிகளின் முன்னேற்றம் குறித்து உயர் அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டம் கலெக்டர் சுகபுத்ரா முன்னிலையில் மாவட்ட கண்காணிப்பு அலுவலரான மகளிர் மேம்பாட்டு கழக மேலாண்மை இயக்குனர் ஷஜீவனா தலைமையில் நடந்தது. இதில் உங்களுடன் ஸ்டாலின் முகாமில் வரப்பெற்ற மனுக்கள் குறித்தும் உடனடியாக தீர்வு காணப்பட்ட மனுக்கள் குறித்தும் மகளிர் உரிமை தொகை தொடர்பாக பெறப்பட்ட மனுக்கள குறித்தும் கேட்டறிந்து பல்வேறு துறை சார்ந்து பெறப்படும் மனுக்களுக்கு உரிய நாட்களுக்குள் தீர்வு காண வேண்டும். டி.ஆர்.ஓ., ராஜேந்திரன், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் கேசவதாசன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
17-Jul-2025