உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / தென் மாவட்டங்களுக்கென கூட்டுறவு சர்க்கரை ஆலை அமையுமா கரும்பு விவசாயிகள் எதிர்பார்ப்பு

தென் மாவட்டங்களுக்கென கூட்டுறவு சர்க்கரை ஆலை அமையுமா கரும்பு விவசாயிகள் எதிர்பார்ப்பு

விருதுநகர்: திருநெல்வேலி, விருதுநகர், துாத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களுக்கென கூட்டுறவு சர்க்கரை ஆலை இல்லை. இம்மாவட்ட விவசாயிகள் தேனி, சிவகங்கை வரை செல்ல வேண்டி உள்ளது. போக்குவரத்து, வெட்டுக்கூலி காரணமாக நஷ்டத்தை சந்திக்கின்றனர். ஆகவே தென் மாவட்டங்களுக்கு என கூட்டுறவு சர்க்கரை ஆலை ஏற்படுத்த வேண்டும் என கரும்புவிவசாயிகள் வலியுறுத்துகின்றனர்.தமிழகத்தில் 17 சர்க்கரை ஆலைகள் உள்ளன. தென் பகுதிக்கு என தென்காசி மாவட்டத்தில் தனியார் சர்க்கரை ஆலை இருக்கிறது. இங்கு தான் தென்மாவட்ட விவசாயிகள் கரும்பு சப்ளை செய்து வந்தனர். 2018ல் கொள்முதல் தொகை நிலுவை ஆனதால் இன்று வரை செயல்படாமல் உள்ளது.இப்போது சிறிது சிறிதாக நிலுவையை வழங்கி வருகின்றனர்.இது 6ஆண்டுகளாக செயல்பாட்டில் இல்லாததால் விவசாயிகள் சிவகங்கை, தேனி மாவட்ட தனியார் சர்க்கரை ஆலைகளுக்கு அனுப்பினர்.இப்போது மீண்டும் தென்காசி தனியார் ஆலை செயல்படுத்தும்பணிகள் தீவிரமானது. ஆனால் நிலுவை தொகை முழுதும் தந்த பிறகே அனுமதிக்க வேண்டும். அதுவரை சிவகங்கை, தேனி ஆலைகளுக்கு அனுப்ப வேண்டும் என விவசாயிகள் கோரி வந்ததையடுத்து சர்க்கரைத்துறை அதை ஏற்று அனுமதித்தது.தென் மாவட்டங்களில் ஆண்டுக்கு ஆண்டு கரும்பு சாகுபடி பரப்பு குறைந்து வருகிறது. 5 ஆண்டுகளுக்கு முன் வர 1500 எக்டேருக்கு மேல் சாகுபடி செய்த விருதுநகர் மாவட்டத்தில் 2023ல்922 எக்டேரும், 2024ல்961 எக்டேரும் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.வெட்டுக்கூலி, போக்குவரத்து கட்டணம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு கரும்பு விவசாயத்தை கைவிடுவது அதிகரித்துள்ளது. கொள்முதல் விலையை உயர்த்துவதாக தி.மு.க., அரசுவாக்குறுதி அளித்த நிலையில் தற்போது வரை நிறைவேற்றவில்லை. ஐந்து தென் மாவட்ட கரும்பு விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு இப்பகுதியில் கூட்டுறவு சர்க்கரையை ஆலையை அமைத்தால் சாகுபடி பரப்பு அதிகரிப்பதுடன் விவசாயிகள் லாபமடைவர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை