உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / கிராமங்களில் கண்காணிப்பு கேமராக்கள்

கிராமங்களில் கண்காணிப்பு கேமராக்கள்

ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துார், வத்திராயிருப்பு பகுதிகளில் பல்வேறு கிராமங்களில் குற்ற சம்பவங்களை தடுக்க கேமராக்கள் அமைக்க போலீசார் உஷார் படுத்தி வருகின்றனர்.தற்போதைய வாழ்க்கை சூழலில் அதிகளவில் திருட்டுகள், போதைப் பொருட்கள் கடத்தல் மற்றும் பல்வேறு குற்ற சம்பவங்கள் நகர் பகுதியில் மட்டுமின்றி கிராமப் பகுதிகளிலும் நடந்து வருகிறது.இத்தகைய குற்றச்செயலில் ஈடுபடுபவர்களை கண்டறிய பாதிக்கப்பட்டவர்களோ அல்லது சம்பவ இடத்தைச் சேர்ந்த மக்களோ தாமாக முன் வருவதில்லை. இதனால் குற்றவாளிகளை கண்டறிவதில் போலீசார் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். குறிப்பாக இரவு நேரங்களில் நடக்கும் திருட்டு சம்பவங்களில் குற்றவாளிகளை எளிதில் கண்டறிய முடியாத நிலை உள்ளது.இத்தகைய சூழலில் நகர்ப்பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் கேமராக்கள் இருப்பதால் ஓரளவிற்கு குற்றவாளிகளை போலீசார் கண்டறிந்து விடுகின்றனர். ஆனால், கிராமப் பகுதிகளில் போதிய அளவிற்கு கேமராக்கள் இல்லாததால் திருட்டு சம்பவங்களில் ஈடுபடுபவர்கள் எளிதில் தப்பி விடுகின்றனர். இதனால் குற்றவாளிகளை கைது செய்வதில் காலதாமதம் ஏற்படுகிறது.இதனைத் தவிர்க்க கிராமங்களிலும் கேமராக்கள் பொருத்துவது மிகவும் அவசியம். இதற்கு அந்தந்தப் பகுதி மக்கள், வியாபார நிறுவனங்கள் தாமாக முன்வர வேண்டுமென போலீசார் உஷார்படுத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி