உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / பி.எஸ்.ஆர்., கல்லுாரியில் தமிழ் கனவு நிகழ்ச்சி

பி.எஸ்.ஆர்., கல்லுாரியில் தமிழ் கனவு நிகழ்ச்சி

சிவகாசி: சிவகாசி பி.எஸ்.ஆர்., பொறியியல் கல்லுாரியில் மாபெரும் தமிழ் கனவு நிகழ்ச்சி நடந்தது. கலெக்டர் சுகபுத்ரா தலைமை வகித்தார். எழுத்தாளர் நெல்லை ஜெயந்தா தரணி போற்றும் தமிழ் நாடு என்ற தலைப்பில் பேசினார். பங்கேற்ற மாணவர்களுக்கு உயர் கல்வி மற்றும் வேலை வாய்ப்பு வழிகாட்டி புத்தகம், தமிழ் பெருமிதம் குறித்த குறிப்பேடுகள் வழங்கப்பட்டது. உயர்கல்வி, வேலைவாய்ப்பு, வங்கிக் கடன் உதவி, தொழில் வாய்ப்பு, கண்காட்சி அமைக்கப் பட்டிருந்தது. 2500 க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர். பி.எஸ்.ஆர்., கல்வி குழுமம் தாளாளர் சோலைசாமி, கல்லுாரி இயக்குனர்கள் அருண்குமார், விக்னேஷ்வரி, முதல்வர் செந்தில்குமார், டீன் மாரிசாமி, மதுரை மண்டல கல்வி இயக்குனர் முத்துராமலிங்கம் திருவாடனை அரசு கலை கல்லுாரி முதல்வர் பழனியப்பன், சிவகாசி அரசு கல்லுாரி முதல்வர் விஜயராணி கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை