உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / கலை விழாவுக்கு அழைத்து அத்துமீறிய ஆசிரியர் கைது

கலை விழாவுக்கு அழைத்து அத்துமீறிய ஆசிரியர் கைது

விருதுநகர்:விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த 17 வயது மாணவி, அரசு மேல்நிலைப்பள்ளியில் படிக்கிறார். இவர், கலைத்திருவிழாவில் வெற்றி பெற்று, மாவட்ட அளவிலான போட்டிக்கு தேர்வானார். இவரையும், அதே போட்டியில் வெற்றி பெற்ற 14 வயது மாணவியையும், விருதுநகரில் நவ., 16ல் நடந்த மாவட்ட போட்டியில் பங்கேற்க கணித ஆசிரியர் ராஜாமணி, 50, காரில் அழைத்து வந்தார்.இந்த இரு சிறுமியருக்கும் வெவ்வேறு பள்ளிகளில் போட்டி நடந்ததால், 14 வயது மாணவியை முதலில் போட்டி நடக்கும் பள்ளியில் இறக்கி விட்டார். பின், 17 வயது மாணவியை அவருக்கான போட்டி நடக்கும் பள்ளியில் இறக்கி விட காரில் அழைத்து சென்றார்.போட்டி முடிந்ததும், மதியம் கார் நிறுத்திய இடத்திற்கு, 17 வயது மாணவியை அழைத்து சென்று, ஆறுதல் கூறுவது போல பாலியல் சீண்டலில் ஈடுபட்டார். அச்சமடைந்த மாணவி, தனக்கு நேர்ந்த கொடுமை பற்றி யாரிடமும் கூறவில்லை.ஆனால், போட்டியில் வெற்றி பெற்ற உடன் வந்த, 14 வயது மாணவியை ஈரோட்டில் நடக்கும் நிகழ்ச்சிக்கு கணித ஆசிரியர் அழைத்து செல்வதை அறிந்த பாதிக்கப்பட்ட மாணவி, தனக்கு நடந்ததை பற்றி பள்ளி தலைமையாசிரியரிடம் கூறினார். இதையடுத்த புகாரில், விருதுநகர் மகளிர் போலீசார் சிறுமியிடம் பாலியல் சீண்டல் செய்த கணித ஆசிரியர் ராஜாமணி மீது போக்சோ வழக்கு பதிந்து கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ