ஆசிரியர் பணி மேம்பாடு பயிற்சி
அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை எஸ்.பி.கே., கல்லூரியில் ஆராய்ச்சி மையம் சார்பாக ஆசிரியர் பணி மேம்பாட்டிற்கான நிகழ்ச்சி நடந்தது.அருப்புக்கோட்டை நாடார்கள் உறவின்முறை தலைவர் சுதாகர் ஆலோசனைகள் வழங்கினார். கல்லூரி செயலர் சங்கரசேகரன் தலைமை வகித்தார். தலைவர் மயில் ராஜன், முதல்வர் செல்லத்தாய் முன்னிலை வகித்தனர். விருதுநகர் செந்தில் குமார நாடார் கல்லூரி பொருளியல் இணை பேராசிரியர் விஜயகுமார் கலந்துகொண்டு பல்வேறு ஆராய்ச்சி முறைகள் மற்றும் பயன்பாடுகள் பற்றி விளக்கினார்.கல்லூரி பேராசிரியர்கள் கலந்து கொண்டனர் ஏற்பாடுகளை தமிழ் துறை தலைவர் தன சுபா, உதவி பேராசிரியர்கள் திரிவேணி, சுப்பிரமணியன், பாஸ்கர் செய்தனர். இணை பேராசிரியர் முத்துகிருஷ்ணவேணி நன்றி கூறினார்.---