உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / கோயிலில் மணி திருடியவர் போலீசில் ஒப்படைப்பு

கோயிலில் மணி திருடியவர் போலீசில் ஒப்படைப்பு

நரிக்குடி : நரிக்குடி எஸ்.மறைக்குளத்தில் ஊத்தடி கருப்பணசாமி கோயிலில் இருந்த மணிகள் அடிக்கடி திருடு போயின. கிராமத்தினர் கண்காணித்து வந்தனர். நேற்று அங்கிருந்த மணிகளை திருடியவரை கையும் களவுமாக பிடித்து அ.முக்குளம் போலீசில் ஒப்படைத்தனர். விசாரித்ததில் அருப்புக்கோட்டை வெள்ளையாபுரத்தைச் சேர்ந்த மாடசாமி 65, என தெரிந்தது. ஏற்கனவே பல இடங்களில் மணிகளை திருடியதை அவர் ஒப்புக்கொண்டார். மேலும் விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை