மேலும் செய்திகள்
சிவன் கோயில்களில் அன்னாபிஷேக விழா
16-Nov-2024
காரியாபட்டி: காரியாபட்டி வெற்றிலைமுருகன் பட்டியில் பூர்ணிமா பொற்கொடியாள், முருகாருடைய அய்யனார் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது.ஆண்டுதோறும் மாசி மாதம் புரவி எடுப்பு திருவிழா 7 நாட்களுக்கு நடைபெறும். 16 அடி உயரம் கொண்ட முருகாருடைய அய்யனார் குதிரை, கருப்பசாமி குதிரை வாகனம் புதிதாக கட்டப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது.மகா கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், வாஸ்து ஹோமம், லட்சுமிஹோமம் நடைபெற்றது. பின் முருகாருடைய அய்யனாருக்கு யாக பூஜை நடந்தது. மகா பூர்ணாஹுதி திருக்குடம் எழுந்தருளி ஆலயம் வலம் வந்து குதிரை வாகனங்களுக்கு கும்பாபிஷேகம் செய்தனர்.தொடர்ந்து திருமஞ்சனம், மஞ்சள், அரிசி மாவு, பன்னீர், சந்தனம் உள்ளிட்ட அபிஷேக பொருட்களால் குதிரை வாகனங்களுக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். அன்னதானம் வழங்கப்பட்டது.
16-Nov-2024