கோயில் பிரச்னை: நகராட்சி முற்றுகை
அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டையில் ஒரு கோயில் பிரச்னை தொடர்பாக பெண்கள் நகராட்சியை முற்றுகையிட்டனர்.அருப்புக்கோட்டை பெரிய தெருவில் மாரியம்மன், மகா மாரியம்மன் கோயில்கள் உள்ளன. அந்தப் பகுதியைச் சேர்ந்த ஒரு சமுதாயத்தினர் பல ஆண்டுகளாக சாமி கும்பிட்டு வந்தனர். அதே சமுதாயத்தைச் சேர்ந்த மற்றொரு பகுதியினர் கோயிலை உரிமை கொண்டாடிய நிலையில், நேற்று காலை 10:30 மணிக்கு 300 க்கும் மேற்பட்ட பெண்கள் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர். பின்னர், மேலாளர் கிருஷ்ணகுமாரிடம், முன்னாள் கவுன்சிலர் தங்கபாண்டியன் தலைமையில், மனு கொடுத்தனர். உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியதன் பேரில் கலைந்து சென்றனர்.