மேலும் செய்திகள்
பந்தல் காய்கறிகளுக்கு விலை நிர்ணயிக்கணும்
04-Jul-2025
ராஜபாளையம்: ராஜபாளையத்தில் அரசு நிகழ்ச்சிக்காக 20 நாட்களுக்கு முன் அமைக்கப்பட்ட பந்தல் அகற்றாததால் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு உள்ளாகின்றனர்.ராஜபாளையத்தில் சீர்மரபினர் நல வாரிய உறுப்பினர் அட்டை வழங்கும் நிகழ்ச்சிக்காக மதுரை ராஜா கடை தெரு முச்சந்தியை மறைத்து மேடையுடன் பந்தல் அமைக்கப்பட்டது.ஜூன் 23ல் நடந்த நிகழ்ச்சியில் வருவாய் துறை அமைச்சர் சாத்துார் ராமச்சந்திரன் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் மெய்யநாதன்பங்கேற்று பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினர். இதற்காக ஒரு வாரத்துக்கு முன் மேடை தடுப்புகளுடன் அமைக்கப்பட்டது. விழா முடிந்து மேடை, தடுப்புகள் அகற்றப்பட்ட நிலையில் 20 நாட்கள் கடந்தும் பந்தல் அகற்றப்படாமல் உள்ளதால் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு உள்ளாகின்றனர்.இதுகுறித்து அப்பகுதியினர் கூறுகையில், தென்காசி ரோட்டில் இருந்து வருபவர்களுக்கு சங்கரன்கோவில் முக்கு, புது பஸ் ஸ்டாண்ட், சத்திரப்பட்டி ரோடு செல்வதற்கு காந்தி கலை மன்றம் சுற்றாமல் சுலபமாக செல்ல மாற்று வழியாக இருந்து வந்தது. பந்தலை காரணமாக வைத்து ஆட்டோ உள்ளிட்ட வாகனங்களை நிறுத்தி ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். பொதுவெளியில் தடை ஏற்படுத்தியுள்ள பந்தலை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
04-Jul-2025