உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / மின்கம்பிகளில் உரசும் கிளைகளை வெட்டாமல் மரத்தையே மொட்டையடிக்கும் மின்வாரியம்

மின்கம்பிகளில் உரசும் கிளைகளை வெட்டாமல் மரத்தையே மொட்டையடிக்கும் மின்வாரியம்

அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டையில் மின்கம்பங்களை உரசி செல்லும் மரத்தின் கிளைகளை வெட்டுவதை தவிர்த்து மரத்தையே காலி செய்த மின்வாரியத்தின் மீது பசுமை ஆர்வலர்கள் வேதனையடைந்துள்ளனர். பொதுவாக மின்வாரியத்தினர் அமைத்திருக்கும் மின் ் கம்பங்களின் அருகில் உள்ள மரத்தின் கிளைகள் வளர்ந்து உரசுவது வழக்கம். வேகமாக காற்று அடிக்கும் பொழுது மின் கம்பிகளின் மீது மரக் கிளைகள் பட்டு மின்தடை ஏற்பட காரணமாவதுஉண்டு. இதைத் தவிர்க்க மாதாந்திர பராமரிப்பின் போது மின்வாரியத்தினர் மின் கம்பிகளில் உரசும் மரத்தின் கிளைகளை மட்டும் வெட்டுவர்.ஆனால் அருப்புக்கோட்டையில் மட்டும் மின் கம்பிகளை உரசி செல்லும் மரக் கிளைகளை வெட்டுவதை விட்டு ஒட்டுமொத்த மரத்தையே மின்வாரியத்தினர் வெட்டி சாய்கின்றனர். அருப்புக்கோட்டை அருகே கஞ்சநாயக்கன்பட்டி - ராமசாமிபுரம் ரோட்டில் ஆதிதிராவிடர் காலனி அருகில் பழைய மின் கம்பங்கள் வரிசையாக உள்ளது இதற்கு அருகிலேயே புது மின்கம்பங்களை உயரமாக அமைத்துள்ளனர். அதன் அருகிலே மரங்கள் வளர்ந்து வரும் நிலையில், கிளைகள்வளர்ந்து மின் கம்பியை உரசும் என மின்வாரிய ஊழியர்கள் அங்குள்ள 10 க்கும் மேற்பட்ட வேம்பு, வாகை மரங்களை பாதியாக வெட்டி விட்டனர். இதுகுறித்து பசுமை ஆர்வலர்கள் கேட்டபோது முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வெட்டப்பட்டது என அலட்சியமாக பதில் கூறியுள்ளனர். இந்த காலகட்டத்தில் மரங்கள்வளர்ப்பது எத்தகைய கஷ்டம் என்பது கூட தெரியாமல் மின்வாரியத்தினர் மரங்களை வெட்டி சாய்கின்றனர். நேற்று நேதாஜி நகர் விரிவாக்க பகுதியில் பழைய மரத்தை வெட்டி சாய்த்து விட்டனர். மாவட்ட நிர்வாகம் இதுகுறித்து மின்வாரியத்திற்கு மின் கம்பிகளை உரசி செல்லும் மரக் கிளைகளை மட்டும் தான் வெட்ட வேண்டும் என்பதை அறிவுறுத்த வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ