உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / அரசு மோட்டார் வாகன பராமரிப்பு துறையில் மெக்கானிக் பற்றாக்குறை வாகனங்கள் தேக்கத்தால் அவதி

அரசு மோட்டார் வாகன பராமரிப்பு துறையில் மெக்கானிக் பற்றாக்குறை வாகனங்கள் தேக்கத்தால் அவதி

விருதுநகர்: விருதுநகர் மாவட்டத்தில் மோட்டார் வாகன பராமரிப்பு துறையின் அரசு தானியங்கி பணிமனையில் மெக்கானிக் பற்றாக்குறையால் அரசு வாகனங்களின் பராமரிப்பு பணிகள் பாதிக்கப்பட்டு பழுது வாகனங்கள் தேங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.மாவட்டத்தில் முக்கியஸ்தர்கள் பாதுகாப்பிற்கு செல்லும் வாகனங்கள், அரசின் பல்வேறு துறையைச் சேர்ந்த வாகனங்களில் ஏற்படும் பழுதுகளை சரிசெய்ய விருதுநகர் மோட்டார் வாகன பராமரிப்பு துறையின் பணிமனையில் போதிய மெக்கானிக்குகள் இல்லை.இதனால் பிற மாவட்டங்களில் இருந்து கூடுதல் பணியாக மெக்கானிக்கள் வாரத்த்திற்கு மூன்று நாட்கள் விருதுநகருக்கு வந்து பணிகளை செய்தனர். ஆனால் அவர்களும் தற்போது வருவதில்லை. அரசு துறை வாகனங்களில் ஆயில், டயர் மாற்றம், சிறு சிறு பழுதுகளை நீக்குதல் என ஒரு நாளைக்கு 50 வாகனங்களுக்கு பணிகள் செய்யப்படுகிறது.ஆனால் பெரிய அளவில் பராமரிப்பு பணிகள் தேவைப்படும் வாகனங்களை மெக்கானிக் பற்றாக்குறை இருப்பதால் வெளியில் கொடுத்து பணிகள் முடித்து பெற்று கொடுக்கின்றனர். இப்படி வெளியே சென்று செய்யும் பணிகளுக்கு ஆகும் செலவு அந்தந்த துறையினரிடம் பெறப்படுகிறது.இதற்கு சில நாட்கள் ஆவதால் அதிகாரிகள் ஆய்வு, துறை பணிகளை செய்ய முடியாமல் அரசின் பல்வேறு துறைகளில் களப்பணிகள் பாதிக்கப்படுகிறது.இந்த பணிமனையில் செய்ய வேண்டிய பணிகளை வெளியே கொடுத்து முடிப்பதற்கு நாங்களே நேரடியாக வெளியே கொடுத்து உடனடியாக பணிகளை முடித்து விடுவோம் என அனைத்து துறையினரும் ஆதங்கத்தில் உள்ளனர்.இதனால் விருதுநகர் மோட்டார் வாகன பராமரிப்பு துறையின் பணிமனைக்கு வாகனங்களை அனுப்பவதற்கே அந்தந்த துறையினர் யோசிக்கும் நிலைக்கு வந்துவிட்டனர். இந்த பிரச்னை இரு ஆண்டுகளாக நீடித்து வந்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.எனவே மோட்டார் வாகன பராமரிப்பு துறையை மேம்படுத்தி, தேவைக்கு ஏற்ப மெக்கானிக் பணியிடங்களை உடனடியாக நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசு துறைகளைச் சேர்ந்தவர்கள் எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி