உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / தரைமட்ட தொட்டிக்கு மூடி போடப்பட்டது

தரைமட்ட தொட்டிக்கு மூடி போடப்பட்டது

திருச்சுழி: திருச்சுழி அருகே திறந்த வெளியில் மூடி இல்லாமல்இருந்த தரைமட்ட தொட்டிக்கு தினமலர் நாளிதழ் செய்தி எதிரொலியால் மூடி போட்டு தொட்டி சீரமைக்கப்பட்டது.திருச்சுழி ஊராட்சி ஒன்றியத்தை சேர்த்த பாறைகுளத்தில் சில மாதங்களுக்கு முன்பு, ரூ.3.50 லட்சத்தில் தரைமட்ட தொட்டி கட்டப்பட்டு பயன்பாட்டிற்கு வந்த நிலையில், தொட்டிக்கு மூடி இல்லாததால் குப்பை காற்றில் பறந்து தொட்டியில் விழுந்து சுகாதார கேடு ஏற்பட்டது. தண்ணீரை பயன்படுத்தும் மக்களுக்கு பல்வேறு நோய்கள் வருகின்றன.இதுகுறித்தான செய்தி தினமலர் நாளிதழில் செய்தியாக வெளிவந்ததை அடுத்து தொட்டிக்கு உடனடியாக மூடி கொண்டு மூடப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ