மேலும் செய்திகள்
நோய் அபாயம்
12-Jan-2025
அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டையில் நகராட்சி பூங்கா நன்கு பராமரிப்புடன் மயங்க வைக்கும் வகையில் இருந்தாலும் அருகில் உள்ள உரக்கிடங்குகளில் வரும் நாற்றத்தால் முகத்தை சுளிக்க வைக்கிறது.அருப்புக்கோட்டை சொக்கலிங்கபுரம் மயான ரோட்டில் நகராட்சி பூங்கா ஒரு ஆண்டிற்கு முன்பு அமைக்கப்பட்டது. இந்தப் பகுதியில் உள்ள 50க்கும் மேற்பட்ட தெருக்களில் உள்ள மக்களுக்கு காலை மாலை நேரங்களில் பொழுது போக்க வசதியாக உள்ளது. பூங்காவில் சிறுவர்கள் விளையாட உபகரணங்கள், இருக்கை வசதிகள், வாக்கிங் செல்ல நடைபாதை உள்ளிட்ட வசதிகள் செய்யப்பட்டுள்ளன. பூங்கா நல்ல முறையில் பராமரிக்கப்பட்டு வருவதால் இந்த பகுதி மக்கள் இங்கு விரும்பி வருகின்றனர்.ஆனால் பூங்காவிற்கு அருகில் நகராட்சியின் மினி உரக்கிடங்கு உள்ளது. சொக்கலிங்கபுரம் பகுதிகளில் சேகரிக்கப்படும் மட்கும், மக்காத குப்பைகள் இங்கு தரம் பிரிக்கப்பட்டு கழிவுகள் நகராட்சியின் குப்பை கிடங்குகளுக்கு கொண்டு செல்லப்படுகிறது. மட்கும் மக்காத குப்பைகளில் ஏற்படும் துர்நாற்றம் அருகிலுள்ள பூங்கா வரை செல்வதால் மக்களின் முகத்தை சுளிக்க வைக்கிறது. நாற்றம் தாங்க முடியாமல் பூங்காவிற்கு வர மக்கள் தயங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
12-Jan-2025