உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / வடிகால் வாரிய அலுவலகம் எதிரே மீண்டும் மீண்டும் உடையுது குழாய்

வடிகால் வாரிய அலுவலகம் எதிரே மீண்டும் மீண்டும் உடையுது குழாய்

விருதுநகர்:விருதுநகர் மதுரை ரோட்டில் குடிநீர் வடிகால் வாரிய அலுவலகம் எதிரே செல்லும் ரோட்டின் மீண்டும் மீண்டும் உடையும் குழாயால் மக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர்.விருதுநகர் மதுரை ரோட்டில் குறுக்கு தெருவாக கே.ஆர்., கார்டன் சந்தில் குடிநீர் வடிகால் வாரிய அலுவலகம் எதிரே உள்ளது. இந்த கே.ஆர்., கார்டன் சந்தின் எதிர்ப்புறம், மதுரை ரோட்டின் இடது புறத்தில் குடிநீர் குழாய் செல்கிறது. இது தாமிரபரணி குடிநீர் குழாயாக உள்ளது. இந்நிலையில் இந்த குழாய் அடிக்கடி உடைசல் ஏற்படுகிறது. கடந்த வாரம் மூன்று முறை உடைந்தது. இது குறித்து தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது. மீண்டும் உடைந்து தற்போது குடிநீர் வீணாகி வருகிறது. ஒரே குழாய் நான்கு முறை உடைந்து தலைவலியை ஏற்படுத்தி வருகிறது. மேலும் இது குடிநீர் வடிகால் வாரிய அலுவலகம் எதிரே வேறு உள்ளதால் மக்கள் கடும் அதிருப்தியை தெரிவிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !