மேலும் செய்திகள்
தொழில் பழகுநர் சேர்க்கை முகாம்
1 minutes ago
போலீஸ் செய்தி
3 minutes ago
ஜெ., நினைவு நாள் அனுசரிப்பு
5 minutes ago
மாநில கலைத் திருவிழா மாணவிக்கு முதல் பரிசு
6 minutes ago
சிவகாசி: சிவகாசி மேல ரத வீதியில் குழாய் உடைந்து குடிநீர் ரோட்டில் ஓடி வீணாவதால் மக்கள் அதிருப்தியில் உள்ளனர். சிவகாசி சேர்மன் சண்முகம் நாடார் ரோட்டில் உள்ள மேல்நிலை குடிநீர் தொட்டியில் இருந்து நகர் புதுத்தெரு, அம்மன் கோவில் பட்டி உள்ளிட்ட பகுதிகளுக்கு குடிநீர் வினியோகம் செய்வதற்காக, மேல ரத வீதி, முருகன் கோயில் தேரடி முக்கு, புது ரோடு வழியாக குழாய் பதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மேல ரத வீதியில் குழாய் உடைந்து குடிநீர் முழுவதும் வீணாகி ரோட்டில் ஓடுகிறது. இதனால் அப்பகுதி முழுவதும் குடிநீர் பற்றாக்குறை ஏற்படும் வாய்ப்புள்ளது. தவிர ரோடும் சேதம் அடைந்து வருகின்றது. சேதம் அடைந்த குழாயை சரி செய்து குடிநீர் வீணாவதை தடுக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
1 minutes ago
3 minutes ago
5 minutes ago
6 minutes ago