உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / குண்டும் குழியுமான சர்வீஸ் ரோடு ரயில்வே ஸ்டேஷன் செல்ல சிரமம்

குண்டும் குழியுமான சர்வீஸ் ரோடு ரயில்வே ஸ்டேஷன் செல்ல சிரமம்

அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை மதுரை ரோடு ரயில்வே மேம்பாலத்தின் கீழ் பகுதியில் உள்ள சர்வீஸ் ரோடு குண்டும், குழியுமாக இருப்பதால் ரயில்வே ஸ்டேஷன் செல்ல முடியாமல் பயணிகள் அவதிப்படுகின்றனர். சர்வீஸ் ரோட்டை பயன்படுத்தி பாலையம்பட்டி, திருக்குமரன் நகர், இ.பி., காலனி உள்ளிட்ட புறநகர் பகுதிகளிலிருந்து சென்னைக்கு ரயிலில் செல்ல, ரயில்வே ஸ்டேஷனுக்கு செல்வர். இந்த ரோடு பல ஆண்டுகளாக கிடங்காக உள்ளது. ஸ்டேஷனுக்கு செல்ல மக்கள் படாதபாடு பட வேண்டியுள்ளது. டூ வீலர்கள், ஆட்டோக்களில் செல்ல முடியாமல் பயணிகள் அவதிப்படுகின்றனர். முக்கியமான ரோட்டை புதியதாக அமைக்க நகராட்சி நிர்வாகம், ரயில்வே துறையும் மெத்தனமாக உள்ளது.பயணிகளின் நலன் கருதி சர்வீஸ் ரோட்டை புதியதாக அமைக்க மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்த வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை