உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / விபத்தில் காயமடைந்த பெண் எஸ்.ஐ., பலி

விபத்தில் காயமடைந்த பெண் எஸ்.ஐ., பலி

அருப்புக்கோட்டை:விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே விபத்தில் காயமடைந்த எஸ்.ஐ., அங்கையர்கண்ணி,48 இறந்தார். அவரது உடல் அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது.அருப்புக்கோட்டை அருகே ஆத்திப்பட்டி ஜெயராம் நகரை சேர்ந்தவர் மகேஷ் குமார் 53. இவர் அரசு பஸ் கண்டக்டராக உள்ளார்.இவரது மனைவி அங்கையர்கண்ணி 48; அருப்புக்கோட்டை மகளிர் ஸ்டேஷனில் எஸ்.ஐ., யாக பணி செய்தார். இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். கணவரும், இவரும் செப். 17 ல் பைக்கில் கோவில்பட்டிக்கு சென்று விட்டு ஊருக்கு வந்து கொண்டிருந்தனர். பந்தல்குடி அருகே நான்கு வழிச்சாலையில் வந்த போது பின்னால் வந்த வாகனம் மோதியதில் இருவரும் காயம் அடைந்தனர்.இருவரையும் அருப்புக் கோட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவ மனைக்கு கொண்டு செல்லப்பட்ட அங்கையர்கண்ணி இறந்தார். அவரது உடல் ஆத்திப்பட்டியில் 21 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ