உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / கடையில் ரூ.15 ஆயிரம் திருட்டு

கடையில் ரூ.15 ஆயிரம் திருட்டு

அருப்புக்கோட்டை : அருப்புக்கோட்டை அருகே ஆத்திப்பட்டியை சேர்ந்தவர் கருப்பசாமி. இவர் திருச்சுழி ரோட்டில் டைல்ஸ் கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இரவு கடையை பூட்டிவிட்டு நேற்று காலை திறப்பதற்காக வந்த போது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது.உள்ளே சென்று பார்த்தபோது உண்டியலில் சேர்த்து வைத்திருந்த 15 ஆயிரம் ரூபாய் திருடு போனது தெரிய வந்தது. கடையில் பொருத்தப்பட்ட சி.சி.டி.வி., கேமராக்களை ஆப் செய்து விட்டதால் திருடு போன காட்சி பதிவாகவில்லை. அருப்புக்கோட்டை தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ