மேலும் செய்திகள்
உழவர் சந்தையில் வடிகால் அமைக்க உத்தரவு
05-Nov-2024
நாமக்கல் உழவர் சந்தையில் 25 டன் காய்கறி விற்பனை
04-Nov-2024
திருச்சுழி : திருச்சுழியில் உழவர் சந்தை இல்லாததால் விவசாயிகள் தாங்கள் விளைவித்த காய்கறிகளை விற்க முடியாமல் அவதிப்படுகின்றனர்.விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு பயிர் செய்த காய்கறிகளை இடைத்தரகர்கள் யாரும் இன்றி நேரடியாக விற்பனை செய்வதற்கு 1999ல், உழவர் சந்தைகள் தமிழக அரசு ஏற்படுத்தியது. ஆனால் திருச்சுழி ஊராட்சி ஒன்றியமாகவும் சட்டசபை தொகுதியாக இருந்தும் உழவர் சந்தை அமைக்கப்படவில்லை.இதனால் திருச்சுழி, நரிக்குடியை சுற்றியுள்ள நூற்றுக்கு மேற்பட்ட கிராம மக்கள் தங்களின் விலை பொருட்களை 20 கி.மீ., தூரத்திற்கு மேல் உள்ள அருப்புக்கோட்டை உழவர் சந்தைக்கு தான் கொண்டு செல்ல வேண்டி உள்ளது. அரசு பஸ் வசதிகளும் ஒழுங்காகச் செய்யப்படவில்லை. இதனால் விவசாயிகள் சரக்கு வாகனங்கள் தனியார் பஸ்களின் மூலம் காசு கொடுத்து தங்கள் பொருட்களை சந்தைக்கு கொண்டு வந்து விற்கின்றனர். திருச்சுழியில் உழவர் சந்தை இருந்தால் சுற்றியுள்ள கிராமப் பகுதி மக்கள் தங்கள் பொருட்களை கொண்டு வந்து விற்க வசதியாக இருக்கும். தற்போது இந்த பகுதி மக்கள் அருப்புக்கோட்டை உழவர் சந்தைக்கு வந்து தான் காய்கறிகளை வாங்கிச் செல்கின்றனர்.இதேபோன்று திருச்சுழியில் தாலுகா அலுவலகம், போலீஸ் ஸ்டேஷன் தவிர, எம். ரெட்டியபட்டியில் ஊராட்சி ஒன்றிய அலுவலகம், வேளாண் துறை அலுவலகம், காரியாபட்டியில் எம்.எல்.ஏ., அலுவலகம் என, பல துறை அலுவலகங்கள் வெளியூர்களில் தான் உள்ளது. பேருக்கு தான் திருச்சுழி சட்டசபை மற்றும் திருச்சுழி யூனியன் என அழைக்கப்படுகிறது.
05-Nov-2024
04-Nov-2024