உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / பதிவு செய்த மனுதாரரை அழைக்க மைக் இல்லை காத்திருக்கும் மக்களுக்கு குடிநீரும் இல்லை

பதிவு செய்த மனுதாரரை அழைக்க மைக் இல்லை காத்திருக்கும் மக்களுக்கு குடிநீரும் இல்லை

விருதுநகர் : விருதுநகரில் நடந்த குறைதீர் கூட்டத்தில் பதிவு செய்த மனுதாரரை அழைக்க மைக் இல்லாததால் ஊழியர்கள் சிரமப்படுவதுடன், காத்திருக்கும் மக்களுக்கும் வளாகத்தில் போதிய அளவில் குடிநீர் வசதி இல்லை. விருதுநகரில் நேற்று குறைதீர் கூட்டம் நடந்தது. இதில் மக்கள் அளிக்கப்படும் புகார் மனு முதலில் கணினியில் பதிவு செய்யப்படும். பின் அவர்களின் பெயர் அழைக்கப்பட்டு வரிசையில் செல்ல அனுமதிக்கப்படுவர். கணினி பதிவு மூலம் மனு வந்த விவரம், அதன் மீது நடவடிக்கை எடுக்கும் நிலை தெரிய வரும். பழைய கலெக்டர் அலுவலகத்தில் நடந்த குறைதீர் கூட்டத்தின் போது பதிவு செய்த மனுதாரரை அழைக்க மைக் பயன்படுத்தி அழைப்பர். இதனால் எவ்வளவு கூட்டம் இருந்தாலும் மக்கள் அதை கேட்டு வரிசையில் வந்து விடுவர். தற்போது மைக் இல்லாததால் இன்னொரு ஊழியரும் இணைந்து சத்தமிட்டு மனுதாரரை அழைக்கும் நிலை உள்ளது. நேற்று மக்கள் கூட்டம் அதிகரித்துள்ளதால் மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர். மேலும் குறைதீர் கூட்ட மனுக்கள் பதியும் வளாகத்தில் குடிநீருக்கு எந்த ஏற்பாடும் செய்யவில்லை. மனு பெறும் கூட்டரங்கு அறை முன் குடிநீர் உள்ளது. ஆனால் இங்கு இல்லை. இதனால் மக்கள் தண்ணீருக்கு தவியாய் தவித்தனர். சிலர் தண்ணீர் பாட்டில் கொண்டு வந்ததால் பகிர்ந்து கொண்டனர். குறைதீர் கூட்டங்களுக்கு வரும் மக்கள் பலருக்கு வளாகத்தில் எங்கெங்கு குடிநீர் வசதி உள்ளது என தெரியாது. வழக்கமாக மனு பதியும் இடத்தில் வைக்கும் குடிநீர் வசதியை ஏன் இம்முறை செய்யவில்லை . காத்திருந்த போலீசாரும் நா வறட்சிக்கு உள்ளாகினர். இது போன்று மக்கள் கூடும் இடத்தில் தேவையான முன்னெச்சரிக்கை வசதிகளை மாவட்ட நிர்வாகம் தயார்நிலையில் செய்ய வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை