உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / இயந்திரங்கள் வாங்கியதில் முறைகேடு தனி அலுவலர் உட்பட மூவருக்கு சிறை

இயந்திரங்கள் வாங்கியதில் முறைகேடு தனி அலுவலர் உட்பட மூவருக்கு சிறை

ஸ்ரீவில்லிபுத்துார்:விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்துாரில் எண்ணெய் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்தில் இயந்திரங்கள் வாங்கியதில் ரூ.2.40 லட்சம் கையாடல் செய்த வழக்கில் கூட்டுறவுத்துறை தனி அலுவலர் சுப்பிரமணியன், கூட்டுறவு சங்க மேனேஜர் சிவப்பிரகாசம், வெல்டிங் ஒர்க்ஸ் உரிமையாளர் குமார் ஆகியோருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதித்து தலைமை குற்றவியல் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.ஸ்ரீவில்லிபுத்துாரில் மாரியம்மன் எண்ணெய் உற்பத்தி கூட்டுறவு சங்கத்தில் தமிழ்நாடு மேற்கு தொடர்ச்சி மலை அபிவிருத்தி திட்டத்தின் கீழ் 2003ல் பழைய இயந்திரங்களை வாங்கிவிட்டு புதிதாக இயந்திரங்கள் வாங்கியதாக ரூ 2.40 லட்சத்தை கையாடல் செய்தும், அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுத்தியதாகவும் கதர் கிராம உதவி இயக்குனர் ரங்கன், கூட்டுறவு சங்க தனி அலுவலர் சுப்பிரமணியன் மேனேஜர் சிவபிரகாசம், விருதுநகர் வெல்டிங் ஒர்க் உரிமையாளர் குமார் ஆகியோர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்கு தொடர்ந்தனர். ஸ்ரீவில்லிபுத்துார் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடந்தது. இதில் தனி அலுவலர் சுப்பிரமணியன், மேனேஜர் சிவப்பிரகாசம் ஆகியோருக்கு 3 ஆண்டு சிறை, தலா ரூ. 35 ஆயிரம் அபராதம், வெல்டிங் ஒர்க்ஸ் உரிமையாளர் குமாருக்கு 3 ஆண்டு சிறை ரூ. 30 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி வீரணன் தீர்ப்பளித்தார். வழக்கு விசாரணை காலத்தில் கதர்கிராமத் தொழில் உதவி இயக்குனர் ரங்கன் காலமானார். அரசு தரப்பில் வழக்கறிஞர் முத்துவல்லி ஆஜரானார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ