/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / அழியும் நிலையில் தும்பைகுளம் கண்மாய் குப்பை எரிப்பு: கட்டட கழிவுகள் குவிப்பு
அழியும் நிலையில் தும்பைகுளம் கண்மாய் குப்பை எரிப்பு: கட்டட கழிவுகள் குவிப்பு
அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டையில் தும்பை குளம் கண்மாயில் குப்பை கொட்டி எரிப்பதாலும், கட்டடக் கழிவுகளை குவிப்பதாலும் கண்மாய் அழியும் நிலையில் உள்ளது.அருப்புக்கோட்டை அருகே கஞ்சநாயக்கன்பட்டியில் தும்பை குளம் கண்மாய் உள்ளது. குடிநீர் ஆதாரமாகவும், விவசாய நிலங்களுக்கு பாசன வசதி தந்தது. பராமரிப்பு இல்லாமல் போனதால் அருப்புக் கோட்டை நகரின் ஒரு பகுதி கழிவுநீர் கண்மாயில் விடப்படுகிறது. இதில் சாய கழிவு நீரும் விடப்படுகிறது. முழுவதும் ஆகாய தாமரைகள், புற்கள் வளர்ந்துள்ளன. கண்மாயின் பல பகுதிகள் சிறிது சிறிதாக ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு வருகிறது. கட்டட கழிவுகளை கொட்டி கண்மாயின் பரப்பளவை குறைத்து வருகின்றனர். குப்பைகளை கொட்டி தீ வைக்கின்றனர். இதில், ஏற்படும் புகையால் சுகாதார கேடு ஏற்படுகிறது. கண்மாயை தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும்.