வணிக கண்காட்சி
சிவகாசி : சிவகாசி எஸ்.எப்.ஆர்., மகளிர் கல்லுாரி முன்னாள் மாணவியர் சங்கம் சார்பில் வணிக கண்காட்சி இரு நாட்கள் நடந்தது. கல்லுாரி நிர்வாகக் குழு உறுப்பினர்கள் விஜயலட்சுமி, ப்ரீத்தி கல்லுாரி முதல்வர் சுதா பெரியதாய் விற்பனையை துவக்கி வைத்தனர். கைவினைப் பொருட்கள், அழகு சாதன பொருட்கள், ஆடைகள், சிறுதானிய உணவுப் பொருட்கள், சணல் கைப்பைகள், பொம்மைகள், இயற்கை சார் பொருட்கள் உட்பட பல்வேறு பொருட்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தன. 54 விற்பனை கடைகளில் தங்களுக்கு தேவையான பொருட்கள் வாங்கி பயனடைந்தனர். ஏற்பாடுகளை முன்னாள் மாணவியர் சங்க ஒருங்கிணைப்பாளர் ஷோபனா தேவி, பேராசிரியர்கள் செய்தனர்.