மேலும் செய்திகள்
ஏ.ஐ.எம்.டி.சி., முன்னாள் தலைவருக்கு நினைவேந்தல்
19-Oct-2025
சாத்துார்: சாத்துார் எஸ்.ஆர்.என்.எம்.கல்லுாரியில் வர்த்தக கண்காட்சி நடந்தது.முதல்வர் கிருஷ்ணவேணி தலைமை வகித்தார். கண்காணிப்பாளர் குணசேகரன் முன்னிலை வகித்தார். ஜுவல்லர்ஸ் உரிமையாளர் கண்ணன், ஆப்டிகல்ஸ் உரிமையாளர் ராஜ் பாபு, பர்னிச்சர் உரிமையாளர் சிவசங்கரி, பத்மாவதி, ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றி வைத்தனர். வர்த்தக கண்காட்சியில் 25க்கும் மேற்பட்ட வணிக நிறுவனங்கள் விற்பனைக்கு வைத்திருந்த பொருட்களை மாணவர்கள், பேராசிரியர்கள், கண்டு களித்து பொருட்களை வாங்கிச் சென்றனர். வணிக நிர்வாகவியல் துறையின் சார்பில் ஏற்பாடுகள் செய்யப் பட்டிருந்தன.
19-Oct-2025