தொழிற்சங்க அங்கீகார தேர்தல்
விருதுநகர்: விருதுநகர் ரயில்வே ஸ்டேஷனில் தொழிற்சங்கங்களுக்கான அங்கீகார தேர்தல் நடந்தது.தென்னக ரயில்வே நிர்வாகத்துடன் பேச்சுவார்த்தை நடத்தும் அதிகாரம் படைத்த சங்கத்தை தேர்வு செய்யும் தொழிற்சங்கங்களுக்கான அங்கீகார தேர்தல் நடந்தது. விருதுநகர் ரயில்வே ஸ்டேஷன் காத்திருப்பு அறையில் நடந்த தேர்தலில் 649 பேரில் (டிச. 4) நேற்று 425 பேர் ஓட்டளித்தனர். இன்று (டிச. 5) இரண்டாம் நாள் ஓட்டுப்பதிவு நடக்கிறது.இத்தேர்தலில் எஸ்.ஆர்.எம்.யூ., டி.ஆர்.இ.யூ., எஸ்.ஆர்.இ.எஸ்., டி.ஆர்.கே.எஸ்., சங்கங்கள் போட்டியிடுகின்றன. 30 சதவீதம் ஆதரவு பெறும் சங்கமே வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படும். எந்த பிரச்னையின்றி சுமுகமான முறையில் தேர்தல் நடத்தப்பட்டது.