உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / பார்க்கிங் வசதி இல்லாததால் போக்குவரத்து நெருக்கடி

பார்க்கிங் வசதி இல்லாததால் போக்குவரத்து நெருக்கடி

சிவகாசி, சாத்துார், விருதுநகர், ராஜபாளையம், அருப்புக்கோட்டை உள்ளிட்ட நகராட்சி பகுதிகளில் நாளுக்கு நாள் வணிக நிறுவனங்கள் சூப்பர் மார்க்கெட்டுகள் என புதிய வர்த்தக நிறுவனங்கள் உருவாகி வருகின்றன. இந்த வர்த்தக நிறுவனங்களில் போதுமான பார்க்கிங் வசதி இல்லாத நிலையில் சாலை ஓரத்தில் மக்கள் தங்கள் இருசக்கர, நான்கு சக்கர வாகனங்களையும் நிறுத்தி விட்டு பொருட்கள் வாங்க வணிக நிறுவனங்களுக்கு செல்கின்றனர். இதனால் நகராட்சி பகுதியில் உள்ள முக்கிய வீதிகள் வாகனங்களால் நிரம்பி வழியும் சூழல் உள்ளது. போக்குவரத்து போலீசார் போக்குவரத்துக்கு இடையூறு இன்றி வாகனங்களை நிறுத்துவதற்காக சாலை ஓரத்தில் கயிறு அடித்து வாகனங்களை நிறுத்துவதற்காக இடம் ஒதுக்கி உள்ளனர். ஆனால் இந்த இடமும் பற்றாமல் போகும் நிலையில் மெயின் ரோடு கடைவீதி பஜார் பகுதிகளில் சாலையின் ஓரத்திலேயே பெரும்பாலான வாகனங்கள் நிறுத்தப்படுவதால் இந்த வழியாக செல்லும் கனரக வாகனங்கள் விலகிச் செல்லக்கூட வழி இன்றி போக்குவரத்து நெரிசலில் சிக்கி தினறும் நிலை உள்ளது. பாதசாரிகளும் நடந்து செல்ல வழி இன்றி அவதிப்படும் நிலை உள்ளது. நகராட்சி பகுதிகளில் பெரும்பாலான பூங்காக்கள் , நீரேற்று நிலையங்கள் மேலும் பயன்பாட்டில் இல்லாத வணிக வளாகங்கள் பல உள்ளன. இந்த இடங்களை நகராட்சி நிர்வாகம் பார்க்கிங் பகுதியாக மாற்றி மக்கள் தங்கள் இருசக்கர வாகனங்களையும் நான்கு சக்கர வாகனங்களையும் நிறுத்துவதற்கு அனுமதிப்பதன் மூலம் நகர் பகுதியில் நிலவும் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு ஏற்படும். மேலும் நகராட்சி சொந்தமான இடங்களில் இது போன்ற பார்க்கிங் வசதியை செய்து வாகனங்களுக்கு நியாயமான கட்டணங்கள் வசூலிப்பதன் மூலம் நகராட்சிகளுக்கு கூடுதல்வருவாய் கிடைக்கும். எனவே சம்பந்தப்பட்ட மாநகராட்சி நகராட்சி அதிகாரிகள் இது குறித்து ஆலோசித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை