காற்றில் சாய்ந்த மரத்தால் போக்குவரத்து பாதிப்பு
வத்திராயிருப்பு: வத்திராயிருப்பு தாணிப்பாறை ரோட்டில் நேற்று மாலை திடீரென பலத்த காற்று வீசியதில் மரம் ஒன்று மின்வயரில் சாய்ந்தது. இதனால் தாணிப்பாறையில் இருந்து பஸ்கள் வர முடியாமல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. வத்திராயிருப்பு போலீசார் மற்றும் தீயணைப்புத் துறையினர் மரங்களை அகற்றி போக்குவரத்தை சரி செய்தனர்.