உள்ளூர் செய்திகள்

ரயில் பயணி காயம்

ஸ்ரீவில்லிபுத்துார்: வத்திராயிருப்பு அருகே ராமச்சந்திரபுரத்தை சேர்ந்தவர் நடராஜன் 69, இவரது மனைவி ஜெயலட்சுமி 60, இருவரும் நேற்று முன்தினம் இரவு சென்னையில் இருந்து பொதிகை எக்ஸ்பிரஸ் ரயிலில் ஸ்ரீவில்லிபுத்துார் வந்தனர். நேற்று அதிகாலை 5:10 மணிக்கு ரயிலில் இருந்து இறங்கும் போது பிளாட்பாரத்திற்கும், ரயிலுக்கும் இடையில் விழுந்து காயமடைந்தார். அங்கிருந்த பயணிகளும், ரயில்வே போலீசாரும் அவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனால் ரயில் 15 நிமிடம் தாமதமாக புறப்பட்டு சென்றது. ரயில்வே போலீசார் விசாரித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ