சென்டர் மீடியனில் மோதிய லாரி
ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்தூரில் தேசிய நெடுஞ்சாலை சென்டர் மீடியனில் லாரி மோதியதில ஏற்பட்ட விபத்தினால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.கரூரில் இருந்து சிமென்ட் லோடு ஏற்றிக்கொண்டு திருவனந்தபுரம் நோக்கி சென்ற 14 சக்கர லாரி நேற்று அதிகாலை 1:30 மணியளவில் ஸ்ரீவில்லிபுத்தூர் மடவார் வளாகம் வளைவுப் பகுதி சென்டர் மீடியனில் மோதி நின்றது. டிரைவர் கார்த்திக்குமார் 22, காயமின்றி தப்பினார். டேங்க் உடைந்து ரோட்டில் டீசல் ஓடியதால் தீ விபத்து ஏற்படுவதை தவிர்க்க தீயணைப்புத் துறையினர் தண்ணீர் பீய்ச்சியடித்து சுத்தம் செய்தனர். போக்குவரத்து போலீசார் போக்குவரத்தை ஒழுங்கு படுத்தினர். மற்றொரு கனரக லாரி வரவழைக்கப்பட்டு சிமென்ட் மூடைகள் மாற்றம் செய்யப்பட்டதால்காலை 10:00 மணி வரை தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது.