உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / வீட்டில் கள்ளச்சாராயம் காய்ச்சிய இருவர் கைது

வீட்டில் கள்ளச்சாராயம் காய்ச்சிய இருவர் கைது

ராஜபாளையம்: ராஜபாளையம் துரைச்சாமிபுரம் செங்குட்டுவன் தெருவில் மது விலக்கு பிரிவு போலீசார் சோதனை செய்ததில் அதே பகுதியை சேர்ந்த சந்தோசம் 50, ஜோதி 48, ஆகியோர் வீட்டில் கள்ளச்சாராயம் காய்ச்சியது கண்டுபிடிக்கப்பட்டது. நடைபெற உள்ள பொங்கல் திருவிழாவிற்காக கள்ளச்சாராய ஊறல் தயார் செய்து வந்தது விசாரணையில் தெரிந்தது.அங்கிருந்து ஒரு லிட்டர் சாராயம், 10 லிட்டர் சாராய ஊறல், சிலிண்டர், அடுப்பு மற்றும் பாத்திரங்களை பறிமுதல் செய்து இருவரையும் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ