உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / குறைந்த விலைக்கு தங்கம் தருவதாக ரூ.48 லட்சம் மோசடி; இருவர் கைது

குறைந்த விலைக்கு தங்கம் தருவதாக ரூ.48 லட்சம் மோசடி; இருவர் கைது

ராஜபாளையம்:விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் குறைந்த விலைக்கு தங்கம் வருவதாக கூறி ரூ.48 லட்சம் மோசடி செய்த கருப்பையா , கண்ணன் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். மதுரையை சேர்ந்தவர் முத்துக்குமார் 48, தங்கக் கட்டிகளை வாங்கி வியாபாரம் செய்து வந்தார். குறைந்த விலைக்கு ராஜபாளையத்தில் தங்கம் இருப்பதாக வலைத்தளத்தில் வந்த விளம்பரத்தை கண்டு அந்த எண்ணில் தொடர்பு கொண்டார். இதனையடுத்து ரூ.48 லட்சத்துடன் ராஜபாளையம் பஞ்சு மார்க்கெட்டிற்கு வந்து அழைத்துள்ளார். அங்கு வந்த நபர் தங்கக் கட்டியை கொடுத்து பணத்தை வாங்கியதுடன் நகை கடையில் சோதனை செய்து கொள்ளுமாறு அவருடன் நாகமலை புதுக்கோட்டையை சேர்ந்த கருப்பையா 23, என்பவரை ஆட்டோவில் அனுப்பி உள்ளனர். ராஜபாளையம் -மதுரை ரோட்டில் உள்ள நகை கடைக்கு சென்று உள்ளே முத்துக்குமாரை அனுப்பிவிட்டு தங்கக்கட்டியை எடுத்து கொண்டு அங்கே டூவீலரில் தயாராக இருந்த மதுரையை சேர்ந்த கண்ணன் 22, என்பவருடன் கருப்பையா மாயமானார்.புகாரின் பேரில் வடக்கு போலீசார் டூவீலரில் தப்பி ஓடிய கருப்பையா, கண்ணன் இருவரையும் பிடித்தனர். விசாரணையில் கமிஷனுக்கு மட்டுமே இருவரும் வேலை செய்வதாகவும் தங்க கட்டியையும் பணத்தையும் வேறு நபரிடம் கொடுத்து விட்டதாகவும் தெரிவித்தனர். அதன் பேரில் , தனிப்படை அமைத்து மற்றொருவரை போலீசார் தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை