மேலும் செய்திகள்
அனுமதியில்லா பட்டாசு தயாரிப்பு
09-Feb-2026
சட்டவிரோதமாக பட்டாசுகள் தயாரிப்பு
26-Jan-2026
வத்திராயிருப்பு: வத்திராயிருப்பு அருகே சேதுநாராயணபுரத்தில் வெடி மூலப் பொருட்களை வைத்து பட்டாசு தயாரித்த சிவகாசியை சேர்ந்த ஜெயலட்சுமி, பழனிச்செல்வம் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். நேற்று மதியம் சேது நாராயணபுரம் கிராமத்தில் சுடுகாட்டிற்கு அருகே வருவாய்த்துறையினரும், போலீசாரும் நடத்திய சோதனையில் அங்கிருந்த 15 கிலோ சல்பர், 30 கிலோ கரி தூள், ஏற்கனவே தயார் செய்து வைக்கப்பட்ட வெடிமருந்து திரி, ஆயில் கேன், நூல் கண்டு, திரி செய்ய பயன்படுத்திய மிஷின் ஆகியவற்றை கைப்பற்றி அங்குள்ள அறையில் வைத்து சீல்வைத்தனர். இது தொடர்பாக சிவகாசி ரிசர்வ் லயனை சேர்ந்த ஜெயலட்சுமி 34, பழனி செல்வம் 42 ஆகியோரை கைது செய்தனர். இதனையடுத்து போலீசார் நடத்திய சோதனையில் அனுமதி இன்றி திரி வைத்த அட்டைக் குழாய்களை விற்பனைக்கு வைத்த ஜான்சி ராணி 36, பிரபாகரன் 37 ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்தனர்.
09-Feb-2026
26-Jan-2026