உள்ளூர் செய்திகள்

இருவர் தற்கொலை

சாத்துார் : விருதுநகர் மாவட்டம் சாத்துாரில் இருவேறு சம்பவங்களில் இருவர் தற்கொலை செய்தனர்.சாத்துார் சிந்தப் பள்ளியைச் சேர்ந்தவர் சசிகுமார் ,23.இவர் மனைவி கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வருகிறார். டிச.12இரவு மனைவிக்கு போன் செய்து குழந்தையை அழைத்துக் கொண்டு வீட்டிற்கு வருமாறு கணவர் கூறியுள்ளார். அவர் மறுக்கவே இரவு சசிகுமார் வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். சாத்துார் போலீசார் விசாரிக்கின்றனர்.இதே போல் சாத்துார் முத்துராமலிங்கபுரத்தை சேர்ந்தவர் சுந்தரவேலன் இவர் மனைவி சந்திரலேகா ,28. டிச.12ல் மதியம் கணவன் மனைவிக்கிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. ஆத்திரமடைந்த பெண் அறைக்கு சென்று துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். சாத்துார் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !