உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / சாத்துாரில் தாமதமாக நடக்கும் பாதாள சாக்கடை திட்ட பணி

சாத்துாரில் தாமதமாக நடக்கும் பாதாள சாக்கடை திட்ட பணி

சாத்துார : சாத்துாரில் தாமதமாக நடக்கும் பாதாள சாக்கடை பணியை விரைவாக நடக்க வேண்டுமென மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். சாத்துார் நகராட்சியில் 24 வார்டுகள் உள்ளன.பெரியார் நகர் மேல காந்தி நகர் குருலிங்கபுரம் அண்ணா நகர் உள்ளிட்ட பகுதிகளில் பாதாள சாக்கடை திட்டம் விரிவாக்க பணி 2011 ஆண்டு துவங்கப்பட்டது. தற்போது பணிகள் துவங்கப்பட்டு 14 ஆண்டுகளான நிலையிலும் இன்றும் பணி முழுமை அடையவில்லை. தற்போது வீடுகளுக்கு பாதாள சாக்கடை இணைப்பு வழங்கும் பணி நடந்து வருகிறது.85 சதவீத பணிகள் முடிவடைந்த நிலையில் இன்னும் ஒரு சில பகுதிகளில் பாதாள சாக்கடை இணைப்பு வழங்கப்படாமல் காலம் தாழ்த்தப்பட்டு வருவதால் திட்டம் நிறைவேற இன்னும் பல மாதங்கள் ஆகும்.தற்போது பாதாள சாக்கடை இணைப்பு வழங்கப்பட்ட பகுதிகளில் மக்கள் பாதாள சாக்கடை இணைப்புகளை பயன்படுத்த துவங்கிய நிலையில் முறையாக கழிவுநீர் ஏற்றும் நிலையங்கள் செயல்பாட்டிற்கு வராததால் பாதாள சாக்கடை இணைப்பு பெற்ற வீடுகளில் துர்நாற்றம் வீசும் நிலை உள்ளது.முழுமையான அளவில் பாதாள சாக்கடை இணைப்புகளை வழங்கி கழிவு நீரேற்று நிலையங்களையும் செயல்பாட்டுக்கு கொண்டு வர வேண்டுமென மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !